பக்கம்:வேலின் வெற்றி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 417 பகைவரது ஆற்றலை ஆராய்ந்தறியாத பானுகோபன் தந்தை பணித்தவாறே பெரு வில்லைக் கையில் எடுத்தான் எவர்ைபும் மயக்கும் மோகப்படையும் கைக்கொண்டான். காலாட்படையும் தேர்ப்படையும் கரிப்படையும் பரிப்படையும் எழுந்தன ஆரவாரமும் எழுந்தது; கொடியும் பொடியும் மேல் எழுந்தன. மெய்யறிவால் மேம்பட்ட வீரவாகுதேவர், முருகன் திரு வருளைத் துணைக்கொண்டு மேருமலை போன்ற வில்லைக் கையில் எடுத்தார். வீரர் எண்மரும், இலக்களும் எண்ணிறந்த பூதகணங்களும் போர்க்கோலம் கொண்டு, வானத்தை முட்டிய தேர்களில் வன்மையுடன் போந்தனர். இரு திறத்தவரும் நெருங்கிப் பேர் நிகழ்த்தினர்; இறந்த அசுரர் எண்ணிறந்தவர் முரிந்த காலும் தலையுமாய் உயிர் துறந்த யூதரும் அளவிறந்தவர். அசுரர் சேனை அழியக் கண்ட பானுகோபன் எழுந்தான். "கழிந்த செயலைக் குறித்துக் கவலை கொள்வதிற் பயனில்லை; யானே போர் முனையிற் சென்று, ஒரு நாழிகையில் பகைவரைப் பேரும் இல்லாமல் அழித்திடுவேன். அவ்வாறு செய்யாவிட்டால் நான் சூரன் மகன் அல்லேன்" என்று குள் உரைத்தான். அந் நிலையில் வெற்றி வீரனாகிய வீரவாகு, குமரவேள் திருவடியை மனத்திற் கொண்டு, மகிழ்ச்சியுடன் துதித்து, திண்ணிய உள்ளமுடைய பானுகோபனை எதிர்த்தார். பெருந்திற வாய்ந்த வீரவாகுவும் பானுகோபனும் நிகழ்த்திய போரி வன்மையை யாரே எடுத்துரைக்க வல்லார்?. இருவர் கையிலும். அமைந்த விற்படைகள் சக்கரம்போற் சுழன்று சரமாரி பொழிந்தன. வீரவாகுவின் வில்லினின்றும் எழுந்த அம்புகள் பள்ளத்திற் பாயும் வெள்ளம்போல் விரைந்து, நிலவுலகம்போற் பரந்து, தீயின் திறமையுற்று, ஆகாயம்போல் அழிவற்று, காற்றுப் போல் கடுகி, ஆயிரங்கோடி தலைகளை அறுத்தாலும் வெறுப்படையாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/125&oldid=919665" இலிருந்து மீள்விக்கப்பட்டது