பக்கம்:வேலின் வெற்றி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை - 123 அதனைக் கண்டார், அறுமுகப் பெருமான். எங்கும் நெருங்கிச் சூழ்ந்து நின்ற அசுரப் பெரும் படையின்மீது தெய்வப் படைக்கலமாகிய சக்கராயுதத்தை விட்டார். அப் படை கொடுந் தொழில் புரியும் அசுரரைக் கொன்றது; அவர் மாயையாகிய இருளை மாற்றியது. குருதியின் நிறம் கொண்டு செங்கதிரவன் போல் விளங்கிற்று. கருங்கடல்போல் நின்ற பெருஞ்சேனை விழுந்து ஒழிந்ததை அறிந்தான், சூரன், மனம் மருண்டான், தனியனாய் நின்றான்; தேர் இழந்தான்; வில் இழந்தான், வீரன் என்னும் பேர் இழந்தான், படை இழந்தான் அணி இழந்தான், மணிமுடி இழந்தான் குடையும் இழந்தான்; நாடிழந்த மன்னர்போல் நிலத்திடை நின்றான். அவன் நெஞ்சில் வெஞ்சினம் மூன்டது; உடம்பில் வேர்வை எழுந்தது; முடியணிதற்குரிய தலையை அசைத்தான்; பாலகன் வலிமை நன்று நன்று என்று நகைத்தான் வெற்றி தரும் பிரமாஸ்திரத்தை எடுத்து முருகன் மேல் விடுத்தான். அப் படை நெருங்கிய பொழுது பரஞ்சுடராகிய குமரவேள் தம் கர்த்திலிருந்த வேற்படையை எதிராக விட்டார். அது சென்று அவன் படையை விழுங்கிற்று. அச் செயல் கண்டு வியப்புற்ற சூரன் திரிபுரமெரித்த சிவபெருமானது மெய்ப்படையைக் கையிலெடுத்து முறைப்படி அருச்சனை செய்து வேகமாக விட்டான். அப்போது மண்ணுலகம் நடுங்கிற்று விசும்பிலுள்ள மேகம் இடியுமிழ்ந்து சிதறிற்று. சூரியன் துடித்தான்; சந்திரன் சுழன்றான், மேருமலை வெடித்தது; அண்டம் பிளந்தது. இங்ங்ணம் வெளிப்பட்ட சிவப்படையைக் கண்டார். முருகவேள்; அகத்திலே அன்பு கொண்டார். இஃது என் தந்தையின் படை என்று. தமது செங்கையை நீட்டி வரவேற்றார்; கொடுத்தவர் வாங்கும் தன்மைபோல் அப் படையைப் பற்றினார். அந் நிலையில் சூரன், இன்று வேற்படையின் வன்மை கண்டேன்; வில்லின் ஆற்றலும் கண்டேன்; மற்றைய படைக் கலங்களின் திறமையும் கண்டேன். இன்னும் பால் மணம் மாறாத பாலன் செய்வதைப் பார்ப்பேன் என்று யாதும். பேசாமல் நின்றான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/131&oldid=919679" இலிருந்து மீள்விக்கப்பட்டது