பக்கம்:வேலின் வெற்றி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o வேவின் வெற்றி அலர்ந்த செந்தாமரை போன்ற ஆறுமுகமும், அழகிய கண்ணும், கதில் அசைந்த குண்டலமும், தலையில் அணிந்த திருமுடியும், மணிமார்பும், பன்னிரு கைகளும், படைக்கலங்களின் ஒளியும், .சிலம்பும் ஒலிக்கும் திருவடியும் தெரியக் கண்டான் فباللاreعة அண்டங்கள் ஆயிரத்தெட்டும் ஆளும் சூரனைத் தீவினையாளன் என்றே பலரும்" செல்லுவர். ஆயினும் அறுமுக வள்ளலை நேராகக் காணும் பேறு பெற்றானே அவன் தவத்திற்கு மட்டுமா அவன் தலைவன்: அறத்திற்கும் அவன் முதல்வன் அன்றோ? இன்றளவும் முனிவரும் தேவரும் எண்ணி எண்ணிக் காணாத இறைவனாய முருகனைச் சூரன் தன்னிரு கண்ணால் கண்டான் என்றால், அவன் இயற்றிய தவத்தின் பயனை யார் அறிந்து சொல்ல வல்லார்? தன் முன்னே நின்ற பெருமான் சங்கார காரணனாகிய சிவனார் திருமகனே என்று உணர்ந்தான், சூரன். உள்ளத்திற் கோபமுற்றுக் கந்தவேளை நோக்கி, "பாலனே! என்னை நீ இன்னான் என்று அறிந்திலை போலும். அன்று நீ வென்று அழித்த கிரவுஞ்ச கிரி என்னும் வலியற்ற மலையெனக் கருதினாயா? நான் அளித்த செல்வத்தில் மயங்கிக் கிடந்த தாரகாசுரன் என்று எண்ணினாயா? இன்று நிகழவிருக்கும் போரில் பிரம தேவனும், மாயவனும், விண்ணவர் வேந்தனும், எண்திசைப் பாலரும், இமயவல்லியும் இரக்கமுற்று வருந்த இமைப்பொழுதில் என் வில்லால் உன் வன்மையை அழிப்பேன்" என்றான். இவ்வாறு, சூரன் என்று பேர் பெற்ற கொடியவன் வீரமும், வலிமையும், செருக்கும், சினமும் கொண்டு பேசியபோது, கருணை வடிவாய் நின்ற குமரவேள் புன்முறுவல் பூத்த முகத்தோடு அவனை நோக்கி, "வெற்றியுடையோம், வீரமுடை யோம், பெருமையுடையோம் படைக்கலமுடையோம் அழியா வரம் உடையோம்; அரும்பெருஞ் சேனையுடையோம் என்று அகந்தை கொள்ளதே. அவற்றையெல்லாம் விரைவில் மாற்று வோம் என்று சொல்லி முடிக்கு முன்னே மண்ணளந்த மாயவனைப்போல் பெரிய வில்லை எடுத்து வளைத்தான், சூரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/130&oldid=919677" இலிருந்து மீள்விக்கப்பட்டது