பக்கம்:வேலின் வெற்றி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 2 நீலனும் மாலியும் நெஞ்சழிந்தார்கள், கும்பன், நிகும்பன் என்னும் இருவீரர் கண்ணும் பஞ்சடைந்தது. சண்டியும் தண்டியும் அஞ்சி ஏங்கினர்; வாம்னும் சோமனும் வீழ்ந்து மடிந்தர்கள். பகைவரை நடுங்கச்செய்யும் விவாகு தேரூர்ந்து வந்து சூரன் எதிரே தோன்றினார்; அவரது அழகிய உருவத்தைக் கண்டபொழுது கடுங்கோபங் கொண்டான் அசுரர் கோன், பேக் புரிய நின்ற வீரவாகுவை நோக்கி, “நீ எமது வீரமகேந்திரத்தைச் சாடினாய், அளவிறந்த என் சுற்றத்தாரை அழித்தாய் கணக்கற்ற சேனையைச் சிதைத்தாய்; என் மைந்தரையும் கொன்றய்ை இன்றே உன் உயிரை எடுப்பேன்; போரை முடிப்பேன். உனது வில்லின் வன்மையை அறிவேன் நான் தெய்வப் படைக்கலத் திறனும் தெரிவேன்; உன் உடல் வன்மையும் உணர்வேன் தப்பதை ஒரு படைக்கலத்தால் உன்னை முடிப்பதற்குக் காலம் கருதி இருந்தேன்" என்று சொல்லிச் சூரன் விற்போர் தொடுத்தான். வீரவாகுவும் தமது வில்லை வளைத்து. அம்புமரி பொழிந்தார். அப்பொழுது சூரன் பதினைந்து முத்தலை யம்புகளை விடுத்து, அவர் கையிலிருந்த வில்லை முரித்தான். வில் ஒடிந்தபோது வீரவாகு சீறினார். வேற்படையொன்றை எடுத்து வீசினார்; அஃது அழியா வரம் பெற்ற சூரன் மார்பிற்பட்டு ஒடிந்தது. அது கண். சூரன், திருமால் முதலிய தேவர் திறமெல்லாம் ஒருங்கே கவச வல்ல தண்டாயுதத்தை எடுத்து வீரவாகுவின்மேல் வீசினான். அது விரைந்து சென்று அவர் மார்பில் தாக்கிற்து: மார்பு இருகூறாகப் பிளந்தது. குருதி வெள்ளம் ஆறாகப் பாய்ந்தது. பெருகிய குருதியும், பிளந்த மார்பும், புகைந்த மனமும், குறைந்த வலிமையும் உடையராய் வீரவாகு உடல் சேர்த்து விழுந்தனர். தேவர்கள் அஞ்சி ஓடினர். அப்பொழுது கோடிக்கணக்கான சூசியர்கள் ஒருங்கே ஆணும் திரண்டு ஒர் உருவாகி விண்ணினின்றும் இந்து ம் போர்க்களத்தில் வந்தாற்போன்று குமரவேன் போர் புரிதல் தோன்றினார். அவரைக் கண்டன், சூரன், அன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/129&oldid=919673" இலிருந்து மீள்விக்கப்பட்டது