பக்கம்:வேலின் வெற்றி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு அக சேனையோடு ஆகாய வழியே குரன் தேர்மீது மககவேன் ലു ಶ್ಗ ೩. உடனே எழுந்து 3.證 សំងំ ஓடினான். அறுமுகப LGDIST அடிகளை வணங்கி, ( "ஐயனே முன்னாள் முதல்வன் அளித்த பெரும் శ్రీ படைகளோடு சூரன் இன்று போர் புரிய விரைந்து வருகின்றான். அவனை எதிர்த்து வென்று எமக்குச் சீ. அருள் வேண்டும்" என்று விண்ணப்பித்தான். -L@ణ செந்நிறப் பெருந் தேர் மீது ஏறி அமர்ந்தார், முருகவேள். செந்தலைப் பூதர்கள் கடலினும் பெரிய ஆரவாரத்தோடு எழுந்தனர். அவர் பணித்த iறே அழிவற்ற வீரவாகுவும், அவர் தம்பியரான எட்டு வீரர்களும், திண்ணிய சேனையின் நடுவே சென்றார்கள். வீரம் படைத்தலைவரை முன்னிட்டுச் சேனைகள் இவ் வண்ண்ம் செல்ல, ஈசன் அருளிய குமரவேள் அசுரப்படை நெருங்கி நின்ற டேன்க்கணத்தை அடைந்தார். அசுரர் சேனை குமரன் சேனையை வளைத்தது. பூதர்கள் கிளர்ந்தெழுந்தனர்; ஆரவாரம். செய்தனர்; அசுர;ை א త: ..உதைத்தனர். அவரும் இவர்களை எதிர்த்துத் లై இ’ தாக்கினார். பெரும்போர் மூண்டது. அண்டகோளம் விண்டது. குரனுடைய தம்பியரின் புதல்வரன் படைத்தலைவர் இருவரும் இறந்தனர். அது கண்ட அசுர சேணை சிதறி ஓடிற்று. அண்டங்களை வென்ற சூரன் இவற்றைக் கண்டான், ஊழித் தீயென உருத்து எழுந்தான். அன்னான் சீற்றத்தைக் கண்டு அயன் அஞ்சினன், திருமால் துளங்கினன் இந்திரன் அயர்ந்தனன்; கூற்றுவனும் கலங்கினன், நல்லறம் நடுங் கிற்று ஐம்பெரும் பூதங்களும் அச்சம் கொண்டன. மன்னுயி ரெல்லாம் ஏங்கித் துடித்தன. அவ் வேளையில் பல்லாயிரங் கோடி அம்புகளைச் சூரன அடுக்கடுக்காக விடுத்தான்; மாற்றார் வீசிய மலைகளையும் மரங்களையும் தடுத்தான்; பூதப்படையின் தலைவருடலைத் துளைத்தான். சூரன் விளைத்த போரின் கொடுமையைக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/128&oldid=919671" இலிருந்து மீள்விக்கப்பட்டது