பக்கம்:வேலின் வெற்றி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பின்னை 醬 ஆரிது, இன்று நகரினுள்ளே சென்று, பல தெய்வப் படைகளை எடுத்து வந்து இவனை வெல்வேன். இனி இங்கு நிற்றல் தவறு." என்று எண்ணினான்; தன் நகரை நோக்கித் திரும்பினான். "மாயையில் மறைந்து பானுகோபன் மாநகர் சேர்ந்தான். சூரன் இனி நாளைக் காலையே வருவான். ة يوج இருக்கு அப்போது விரைவில் அழித்திடுக" என்று எழுதல் வானவர் வீரவாகுவின்மீது விரைமலர் து அன்று நிகழ்ந்த போரில் தோற்று ஓடிய கோபன், துன்பமும் பழியும் மானமும் அடைந்தான்; ெ இழந்தான். தன் மைந்தன் அடைந்த வகையை நினைத் பெருஞ்சினம் உற்றான் சூரன், "இனிப் போர் புரிவதற்கு யாரையும் அனுப்புவதில்லை. யானே படையுடன் சென்று பகைவர் வலிமையை அழிப்பேன்; வாகைமாலை சூடுவேன் என்று. எண்ணினான்; வில்லையும் ஏனைய படைக்கலங்களையும் எடுத் தான்; முன்னாள் வானவர் கொடுத்த தெய்வப் படைக்கலங். களையும் கைக்கொண்டான், கரத்திலே தோலுறை மாட்டினன்; புறத்தில் அம்பறாத்துணி துக்கினான்; விரல்களில் பொன்ன லாகிய புட்டில் பூட்டினான். அப்ப்ொழுது, சிங்கமுகாசுரன் மைந்த னாகிய அதிசூரனும், தாரகன் புதல்வனாகிய அசுரேந்திரனும் பேர்க்கோலம் பூண்டு சூரனை அடைந்தார்கள். அவரை நோக்கி, "கடல் போன்ற பெருங்குளம் சிறு கரையில்லாவிடின் உடைந் திடும். அவ்வாறே அரும்போர் புரியும் பெரும்படைகள் இருப் பினும், காக்கும் தலைவர் இல்லையாயின் அவை கட்டழிந்து விடும். ஆதலால், நீங்கள் இருவரும் இன்று போர் புரியும் பெருஞ் சேனைக்குத் தலைவராய் முன்னே செல்க" எனப் பணித்தான், சூரன். அவரும் வணங்கி, அப் பணியை ஏற்று விரைந்து சென்றார்கள். மதகரிகளும் தேர்களும் பரிகளும் கலந்து நெருங்கப் படையின் நடுவே, பெருமணிகள் பதித்த வயிரத் தேர்மேல் ஏறிச் சென்றான், சூரன். கருங்கடலில் ஊழித்தீயின் நடுவே ஆலகாலம் எழுந்தாற்போலச் சென்ற அசுரனைக் கண்டு வானவர் மயங்கினர். of

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/127&oldid=919669" இலிருந்து மீள்விக்கப்பட்டது