பக்கம்:வேலின் வெற்றி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை #29 அவருள்ளத்தில் இன்பம் பொங்கிற்று. பன்முறை வேற்படையைப் பணிந்து போற்றினார்கள் உச்சிமேற் கூப்பிய கையராய் எதிர் சென்று வரவேற்றார்கள். பானுகோபன் இழைத்த மாயையால் நிலையழிந்து, உண விழந்து, நெடுங்கடலுள் விழுந்ததும், ஐயன் வேலால் மீண்டு எழுந்ததும், பிறவும் உணர்ந்தார், அறிஞருள் அறிஞரான வீரவாகு. காலத்தில் வந்து காத்தருளிய வேற்படையை நோக்கி, “அந் நாள் கொடிய அசுரனாகிய் தாரகன் எங்களை வஞ்சனையால் மலையில் அடைத்து மயக்கம் விளைத்தான் அன்றும் நீ எழுந்தருளி வந்த அறிவு தந்தாய்! அவ்வாறே இன்றும் இங்கு வந்து எம்மை ஆட் கொண்டாய், ஆதலால் நாங்கள் பிழைத்தோம். உனக்குச் செய்யத் தக்க கைம்மாறும் இவ் வுலகில் உண்டோ?" என்றார். வீரவாகு சொல்லிய நல்லுரையைக் கேட்ட பொழுது வேற் படை தன் வரலாற்றைக் கூறுவதாயிற்று. "நீங்கள் அறிவிழந்து மயங்கிய தன்மையை எம்பெருமான் உணர்ந்தார்; என்னை இங்கே விடுத்தார் நான் இங்கு வரும் தன்மையை அறிந்து மாயப்படை மாய்ந்தது. ஆதலால், இனி என்னோடு வருக என்றது. அப் படை நன்று, நன்று என்று கை தொழுதார், வீரவாகு முக மலர்ந்தார்; தம்பியரோடும பூதப் படை வீரர்களோடும் வேலின் பின்னே சென்றார். அப் படை விரைந்து சென்று அறுமுகன் கரத்தில் அமர்ந்தது. வடிவேலின் பின்னே சென்ற வீரவாகு அறுமுகப்பெரு ಙಳ್ಗ ಳ್ಗತೆ:'ಸ್ತ್ರಿ சீற்றம் ೭೩75 കl-ിങ്ങ బ్రిణLGU នាវិញ្ញា மகேந்திரம் ಗಿಣುಕಿತ್ತ கண்டார். "அறப் போர் புரியும் ஆண்மையின்றி அஞ்சிச் சென்று, ஆகாயத்தில் மறைந்து நின்று, வஞ்சனை செய்து மாயப் படையால் நம்மை வென்று பிழைத்திருக்கும் பானு கோபனைக் கொன்றாலன்றி எம்பெருமான் சேவடியைக் காணக் செல்வதில்லை. இந் நகரை இன்னே அழிப்பேன்; சூரன் மைந்தன் வந்து எதிர்த்தால் அவனையும் ஒழிப்பேன். அவ்விதம் செய்யாவிடில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/137&oldid=919691" இலிருந்து மீள்விக்கப்பட்டது