பக்கம்:வேலின் வெற்றி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ் வுயிர்வாழ்க்கை வேண்டேன்; நான் பிறந்தவனும் அல்லேன் வில்லொடு நானும் தீயில் விழுவேன்" என்று சபதம் செய்தார். அவ் வாசகத்தைக் கேட்ட பூதப் படைவீரர் வியந்தனர். கிளர்ந்து எழுந்தனர். நொடிப் பொழுதில் மகேந்திர நகரின் மேற்றிசை வாயிலை அடைந்தார், வீரவாகு. பெருங்கடல் உடைந்தாற் போலப் பூதகணம் ஆர்த்தது. நெருங்கி நின்ற மாடமாளிகைகளை யெல்லாம் நெடிய யூதர்கள் தம் காலால் இடித்துத் தகர்த்தார்கள் ஆன்றோர் சாபத்தால் அழிந்தாற் போன் அவை வீழ்த்தப்பட்டன. அப்போது வீரவாகு தீப்படையையும் காற்றுப் படையையும் எடுத்து வில்லிற்பூட்டி அந் நகரின்மீது விடுத்தார். அப் படைக்கலம் இரண்டும் ஒன்றாய்க் கலந்து ஊழிக்காலம் போல் நகரமெங்கும் விரிந்து வளைந்தன. நெருப்புக் கண்ணராகிய அசுரரும் அஞ்சியோடினர். அது கண்ட சூரன், "இப்பொழுது நானே போர் செய்து பூத ஆ, கணங்களைக் கொல்வேன்; வீரர் அனைவரையும் `ಿ அழிப்பேன். சிவகுமாரனையும், ఏమ్పి3మిత வருகி கட்டு தேர் தருக" என்றான். அறிவிழந்த மன்னன் இவ்வாறு தன் துரதரை நோக்கிக் கூறிய மொழிகளைக் கேட்டான், அவன் பெற்ற மைந்தருள் ஒருவனாகிய இரணியன். அவன் ஆயிரம் வேதங்களை உணர்ந்தவன்; செவிச் செல்வம் வாய்ந்தவன்; அறத்தையும் முறையையும் அறிந்தவன். எனினும் மாயமும் வஞ்சமும் குலவித்தையாகக் கற்றவன் கொடிய அசுரரது திறமையும் பெற்றவன் பாதலத்தில் வசிக்கும் அரக்கர்மீது பாய்ந்து வென்று மீண்டவன் வலிய தலைகள் மூன்றுடையவன். அவன் தந்தையாகிய சூரன் அடிகளில் விழுந்து வணங்கி, "ஐயனே! நாம் செய்யத் தக்கதொரு செயல் உண்டு அதனைச் சொல்வேன்" என அன்புடன் கூறுவானாயினான். "அறுமுகப் பெருமானாகிய பரமனைச் சிறுவன் என்று. இகழல் ஆகாது உருவிலே சிறியவன். ஆயினும் செயற்கரிய செய்யும் பெரியவன் முருகன். ஊழிக்காலத்தில் ஈசனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/138&oldid=919693" இலிருந்து மீள்விக்கப்பட்டது