பக்கம்:வேலின் வெற்றி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி.சேதுப்பிள்ளை t31 புன்னகையிலே தோன்றும் சிறு பொறியன்றோ உலகையெல்லாம் அழிப்பது? வாசவன் துயரமும், பிரமன் துயரமும், கேசவன் துயரமும் நீக்கி அழிவற்ற செல்வத்தை அன்னார்க்கு அருளும் வண்ணம் ஈசனே பாலன் வடிவம் கொண்டு அறுமுகனாய்த் தோன்றியுள்ளார். குமரவேளின் கையிலமைந்த வேற்படை தாரகாசுரனைக் கொன்றது. அவன் மாய மலையைத் தகர்த்தது; நன்னிக் கடலுள் நாம் தள்ளிய சேனையை மீட்டது; இத்தகைய ஒப்பற்ற வடிவேலைத் தொழுது, வேலுடைய பாலனைப் பணிவதை விட்டு, அமர் புரியத் துணிதல் அறிவுடையோர் செயலாகுமோ? இன்று வந்து போர் புரிந்தான், வீரனாகிய வீரவாகு என் தமையன் பானுக்ோபன் அவன் முன்னே நிற்கமாட்டாமல் தப்பி மறைந்தான். மாயப்படையை விட்டு, மாற்றர் அறிவை மயக்கிக் கடலிலே தள்ளினான். அன்னார் அன்ைவரும் அறுமுகன் அருளால் மீண்டும் வந்தார்கள். தலைவனான வீரவாகு வீரமகேந்திரத்தை அழிக்கத் தலைப்பட்டான் என்றால் அவனை யார் தடுக்க வல்லார்? கருணை கொண்ட வள்ளல், முருகவேள். அவர் அளவிறந்த சீற்றம் கொள்வதன் முன்னே வானவரைச் சிறையினின்றும் விடுவித்துச் சுற்றத்தோடு நாமும் விரைந்து சென்று, குற்றங்களைப் பொறுத்தருள்க என்ற பணிந்து வேண்டினால், அவர் நாம் செய்த தீமையெல்லாம் பொறுப்பார்; அருள் புரிவார்; அழிவற்ற வரங்களை அளிப்பார்; பூதப்படையோடு திரும்பிச் செல்வார்; அதனால் நாமும் பிழைப்போம்; உன் முன்னே இதனைத் துணிந்து கூறினேன். இது முடிவாக நாம் கொள்ளத் தக்கது" என்று கூறினான், இரணியன். இவ்வாறு இரணியன் பரிவுடன் சொல்லியவ்ற்றைக் கேட்டான், சூரன். அவன் வாயினின்றும் புகைப் jಾ எழுந்து பரந்தது. சீற்றக் கனல் பொங்கிற்று, பொருது உடலம் வியர்த்தது; பெரு மூச்சுப் பிறந்தது; வாயிதழ் மறைதல துடித்தது; கண் சிவந்தது. மனம் எரிந்து பதைத்து, இடிபோல் இரு கரங்களையும் கொட்டி இரணியனை நோக்கி, "பேதை மைந்த மாயவனும், இந்திரனும், ஏனைய வானவரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/139&oldid=919695" இலிருந்து மீள்விக்கப்பட்டது