பக்கம்:வேலின் வெற்றி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 வேலின் வெற்றி அண்டத்தில் உள்ளார் அனைவரும், எல்லார்க்கும் முதல்வனாகிய ஈசன் தானும் என்னை எதிர்த்தால் தோல்வியடைவரேயன்றி வெற்றி பெறுவதுண்டா? யான் பெற்ற வரங்களை அறியாயோ?. 懿 ஆண்மை இழந்தாய்; நம் குல முறை பிழைத்தாய் அரசின் பெருமை துறந்தாய் மாற்றாரைக் கண்டு அஞ்சினாய்; ஆதலால், இவ்வாறு பேசினாய்; இன்னொரு மொழி பேசினால் உன்னை இன்றே மையுரத்தில் ஏற்றுவேன்" எனக் கொதித்துக் கூறினான், சூரன். அது கேட்ட மைந்தன், இக் கொடியவன் என்னுரையைக் கொண்டானல்லன், இவன் மாண்டுபோதல் திண்ணம்; இவ் வுலகில் விதியின் திறத்தினை யாவரே வெல்ல வல்லர்) வெஞ்சினம் கொண்டு போர் புரிந்து விர்ைவில் விழுந்துபடுவான் இவன் யான் அதற்கு முன் இறத்தலே நன்று" எனத் துணிந்து, அவன் அடிகளில் விழுந்து வணங்கி, "ஐயனே! நீ இறுதியாகச் சொல்லிய சபதத்தை நானே முடிப்பேன்" என்றான். அப்போது சூரன், மைந்தனைத் தழுவினான். நன்று நன்று என்று மெச்சினான்; "பெருஞ் சேனையோடு போர்க்களம் செல்க' எனப் பணித்தான். இரணியனும் விடை பெற்று எழுந்து தன் மாளிகை அடைந்தான். அறநெறியில் நின்ற அவ் வீரனது நால் வகைப் படையும் எழுந்தது; உள்ளத்தில் துயரமும் உயர்ந் தெழுந்தது ஆண்மை நிறைந்த பூதங்கள் ஆரவாரம் செய்து நின்ற அமர்க்களம் புகுந்தான். அவனைக் கண்டு வானவர் நடுங்கினர். இரணியனோடு எழுந்து வந்த சேனைப் பெருங்கடலைக் கண்டர் வீரவாகு சீற்றம் உற்றார்; வெஞ்சிலையை வளைத்தார், நல்லறம் ஆனந்த நடனம் புரிந்தது. அவர் விடுத்த அம்புகள், இரணியன் எடுத்த அம்பையும் வில்லையும் ஒடித்தன; அம்பறாத் துணியை அழித்தன, தேரையும் பாகனையும் தீர்த்தன; அசுரன் மார்பைப் பலவிடங்களில் துளைத்தன. அந் நிலையில் இரணியன், எனக்கு அந்தம் நேரும் வேளை வந்தது; ஆயினும் என்னோடு நிற்குமோ? என் தந்தையும் இறந்து தீர்வான். அவன் இறக்கும் பொழுது இறுதிக்கடன் செய்வதற்கு யாரும் எஞ்சி நிற்க மாட்டார். சுற்றத்தார் இற்று ஒழிந்தார். மற்றுமுள்ள உறவினரும் இனி இறப்பார். இஃது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/140&oldid=919699" இலிருந்து மீள்விக்கப்பட்டது