பக்கம்:வேலின் வெற்றி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 133 உண்மை. பிள்ளையைப் பெறுவதும், அன்புடன் போற்றி வளர்ப் பதும், தந்தைக்கு முறைப்படி அந்திக் கடன் செய்வதற்கே யன்றோ? ஆதலால், என்னுயிரைக் காத்தலே கடன் எனக் கருதி, விரைவில் விண்ணிலே மறைந்தான், ஒரு மந்திரத்தை மனத்திலே நினைத்தான். அப்போது அவன் உருவம் அருவ மாயிற்று யாரும் அறியாமல் மீன் வடிவம் கொண்டு கடலி னுள்ளே மறைந்தான். அந் நிலையில் வெற்றிச் சங்கம் முழக் கினார், வீரவாகு. எரிமுகன் என்பவன் சூரனுடைய மக்களுள் ஒருவன்; அவனைக் கருவிற் கொண்ட தாயின் உடல் எளிவுற்றது. அப்போது எரி , மாயவள் அவ்விடம் போந்து, "இக் கருவில் '" இருப்பவன் எரிமுகன் ஒன்றாள். அவன் பிறந்தவுடன் o எரிமுகன் என்னும் பெயர் பெற்றான். அவன் புரிந்து, தெய்வப்படை தாங்கிய கையன், - ஐவர்க்குரிய இறத்த ஆற்றல் உடையவன்; கரிய வஞ்சமும் மாயையும் வல்லவன்; எப் படையையும் அழிக்கும் வீரன், அவன் சூரனிடம் சென்று, "ஐயனே! வலிமை சான்ற வீரவாகுவையும், தலைவரையும், பூதகணங்களையும் நானே வென்று வருவேன்; விடை தருக" என்று வேண்டினான். "நன்று கூறினாய், வென்று வருக என்றான் சூரன். குன்று போன்ற தோள்வலி படைத்த எரிமுகன் தந்தையைத் தொழுதான்; சேனையோடு செருக்குற்று எழுந்தான்; மாற்றாரை ஒரு நாழிகையில் அழிப்பேன் என்று போர்க்களம் சென்றான். அவன் விளைத்த வீரத்தைக் கண்டு யூதர்கள் வெருவி ஓடினர். 'அஞ்சாதீர்' என்று கையமர்த்திக்கொண்டு நொடிப்பொழுதில் தேர்மீது ஏறி வந்தார், விரவாகு. ஆயிரம் அம்புகளை யாவரும் வியக்கும் வகையில் எரிமுகன்மீது ஒருங்கே விடுத்தார்; அவன் தேரையும் குதிரையையும் வில்லையும் சிதைத்தார். இளமையிலேயே காளிதேவியை போற்றி வழிபட்டு ஒரு வரம் பெற்றிருந்தான், எரிமுகன், "போர்க்களத்தில் மாற்றாருடன் பொருது இளைத்த வேளையில் நீ படைத்துணையாக வர வேண்டும்" என்று கேட்டதற்கு இசைந்து வரம் தந்த மகேந்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/141&oldid=919701" இலிருந்து மீள்விக்கப்பட்டது