பக்கம்:வேலின் வெற்றி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 - - வேலின்_வெற்றி நகர்க் காளியை இப்போது தியானித்தான் அவ் வீரன். கருமேகம் போன்ற நிறமும், குலப்படை தாங்கிய தோளும், குலிங்க வேணியும், கொலைக் கண்ணும் உடைய காளி அமர்க்களத்திலே தோன்றினாள்; எரிமுகன் நிலைமையை நோக்கினர்ள். "மாற்றார் உயிரை வாங்குவேன்; மயங்காதே" என்று அபயம் அளித்தாள். பத்திரகாளியின் அருள் பெற்ற அக் காளி பூதகணங்களையும் மற்றையோரையும் அழித்திடும் வண்ணம் ஒரு சூலப்படையை வீசினாள். அதன் வன்மையைக் கண்ட வீரவாகு இப் படை பூதகணங்களின் உயிரைப் போக்கிவிடும்; ஆதலால் தடுத்து முரித்திடல் வேண்டும் என்று கருதிப் பதினான்கு வலிய் பானங் களைக் கணப்பொழுதில் ஏவினார். அதைக் கண்டாள் காளி. யான் விட்ட சூலத்தை இவன் அறுத்தான் என் ஆற்றல் அறியாது இன்னும் எதிரே நிற்கின்றான். இவன் உயிரை உண்பேன் என்று எழுந்தாள். அப்பொழுது இடிபோல் அதட்டினார், வீரவ்ாகு; காளி யின் எட்டுக் கைகளையும் ஒரு கையால் வளைத்துப் பிடித்தார், மற்றொரு கையால் அவள் நெஞ்சில் ஓங்கி அறைந்தார். அவள் கீழே விழுந்து மயக்கமுற்றாள். மயக்கம் தெளிந்தவுடன் "அந்தோ என்ன அறிவற்ற செயல் செய்தேன் அறுமுகப் பெருமான் ஆணையால் போர் செய்ய வந்த வீரவாகுவை வெல்லல்ாகுமோ? இங்கு வந்தது பேதைமை" என்று கூறி, வீரவாகுவிடம் விடை பெற்றுச் சிங்கத்தின்மீதேறிக் கொடிய படைகளோடு வந்த வழியே போயினாள். காளி சென்றதைக் கண்டான், எரிமுகன், சீற்றம் கொண்டான் வீறுற்று எழுந்தான் மேகத்தினிடையே அதிரும் இடிபோல் முழங்கினான். "முன்னே இந் நகரில் வந்து, என் தம்பியின் உயிர் கவர்ந்து சென்ற தூதனாகிய வீரவாகுவின் வலிமையைச் சிதைத்து, அவனுயிரைக் காலனுக்கு விருந்தளிப் பேன். அப்படிச் செய்யாமல் மன்னன் முன்னே செல்வதில்லை" என்று வஞ்சினம் கூறினான். கையில் வில்லெடுத்துப் பேர் தொடுத்தான். அவ் வில் ஒடிந்தது. வேறொரு வில்லை வளைத்து. பற்களைக் கடித்து, வீரமொழி பேசி, பிரமாஸ்திரத்தை விடுத்தான். மாற்றான் ஏவிய படைக்கலத்தைக் கண்டார், வீரவாகு. இப் பிரமாஸ்திரத்திற்கு எதிராக நானும் ஒரு பிரமாஸ்திரத்தை விட்டாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/142&oldid=919703" இலிருந்து மீள்விக்கப்பட்டது