பக்கம்:வேலின் வெற்றி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை 135 பயனில்லை என்று எண்ணி, வீரபத்திரப் படையை எடுத்து, மனத் தாற் பூசனை செய்து வேகமாக விடுத்தார். அது பிரமாஸ்திரத்தை அறுத்தெறிந்து, தடையின்றிச் சென்று, எரிமுகாசுரன் தலைகளைப் பறித்து, அவன் உயிரைக் கவர்ந்து மின்னலைப்போல் வீரவாகு விடம் மீண்டது. போர்க்களத்தின் ஒருசார் நின்று இவற்றையெல்லாம் கண்ட అమిாயிரவர் ஒற்றர்கள் குரனிடம் சென்று எரிமுகன் போர் செய்து வ, இறந்த செய்தியை அறிவித்தர்கள். ஆப்பொழுது வீழ்தல் குரனது மைந்த மூவாயிரவரும் நிகழ்ந்ததை அறிந்து, மன்னன் மாளிகையை அடைந்தனர். சூரனைத் தொழுது நின்று, "எம்ஐயனே எரிமுகன் ஒருவனுக்காக இரங்கலாகுமோ? நாங்கள் மூவாயிரவர் இருக்கின்றோம். இரணி யனும் உயிரோடு இருக்கின்றான், பகலவனைச் சிறைப்படுத்திய பானுகோபன் இருக்கின்றான்; உனக்கு என்ன குறை? பல பல சொல்வதிற் பயன் என்ன்? எம்மைப் போர் செய்ய ஏவினால், பூதரையும் வீரரையும் கந்தனையும் பிறரையும் ஒரு கணப் பொழுதில் வென்று வருவோம்’ என்று கூறினர். அம் மொழி கேட்ட சூரன் துன்பம் துறந்தான் "நன்று மைந்தர்காள், போர் புரியச் செல்க' என்றான். மூவாயிரவரும் தந்தையை வணங்கி விடை பெற்றுச் சென்றனர். போர்க்களம் புகுந்து, தாமரைக் குளத்தைக் கலக்கி, மலர்களைச் சிதைக்கும் மதயானைபோல், மாற்றாரைக் கலக்கினர், மூவாயிரவரும். - - - அவர் வில்லாண்மைக்கு ஆற்றாது அவதியுற்ற பூதரைக் கண்டு, அவர்க்குதவியாக நூறாயிரம் வீரருள் ஓராயிரவர் நெருப் பெனச் சீற்றமுற்று எழுந்தனர், போர் முனையிற் புகுந்தனர். கொடுந்தொழில் புரியும் அசுரரோடு அன்னார் செய்த போரில் விசையன் ஒருவனே எஞ்சி நின்றான்; ஏனையோர் ஆண்மை யிழந்து அழிந்தனர். தன்னைச் சேர்ந்த வீரர் அனைவரும் அழிந்தபோது விசையன் சீறினான்; “சூரன் மைந்தர்களாகிய மூவாயிரம் பேரையும் காலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/143&oldid=919705" இலிருந்து மீள்விக்கப்பட்டது