பக்கம்:வேலின் வெற்றி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி.சேதுப்பிள்ளை - #37 ஆணை யுண்டு, இந்திர ஞாலத் தேருண்டு இவையெல்லாம் இருக்க, என் ஐயனே அறிவற்ற தேவரைப் போல் அரற்றல் ஆகுமோ?" என்று தேற்றினான். தருமகோபன் சொல்லிய மொழிகளால் சிறிது துன்பம் நீங்கி னான், சூரன், "யானே சென்று மாற்றாரையெல்லாம் வீட்டுவேன்" என்று வீறுற்று எழுந்து நடந்தான் புறப்பட்ட மன்னன் முன்னே குறுக்கிட்டு விழுந்தான், தருமகோபன். "இன்று யானும் சேனையும் சென்று பகைவரை வளைத்துச் சிதைத்து வெற்றி பெற்றிடுவோம். விடை தருக" என வேண்டினான். அந் நிலையில் திரும்பி அரியா சனத்தில் ஏறி அமர்ந்தான், சூரன் தருமகோபனுக்கு விடை கொடுத்தான். அவன் உடனே புறப்பட்டுப் போர்க்கோலம் கொண்டான். பேர் பெற்ற ஒரு வேழத்தின்மீது ஏறினான்; எல்லையற்ற படைக் கலங்களை ஏந்தினான் அமைச்சர் பலரும் சூழ்ந்து வர இந்திரன் போலச் சென்றான்; போர்க்களத்தில் நின்ற பூதப்படையின் பெருக்கத்தைக் கண்ணுற்றான்; கருத்திலே கவலை மூண்டது. ஆயினும், இனி எண்ணி மயங்குதல் வீரர்க்கு அழகன்று நடந்தது நடக்கட்டும் என்று துணிந்து சென்றான். தரும கோபனுடைய படைக்கலங்களால் நூறாயிர வீரர்களும் நலிந்து நொந்தார். அசுரப் படை வீரர் முன்னேறினர். அது கண்டு வீரவாகு சீற்றங்கொண்டு எதிர்த்தார். அப்போது தருமகோபனது யானை பூதப் படைகளைத் துதிக்கையால் வாரியெடுத்து அறைந்தது; உடலும் உயிரும் சிதற அடித்தது; முனைந்து வந்து, வீரவாகுவின் தேரைத் தன் கொம்புகளால் இடித்தது; போர்க்களத்தில் கிடந்த தடி யொன்றை எடுத்துத் தேர்ப்பாகனை அடித்துக் கொன்றது. அது கண்ட வீரவாகு நெருப்பெனக் கொதித்தார். தரையில் நின்றுகொண்டு யானையைப் பிடித்து மேலே வீசி எறிந்தார். தரை யில் விழுந்த யானை நடுங்கித் துடித்து மயங்கிற்று அதனருகே சென்ற தருமகோபன் கோபம் கொண்டு தண்டாயுதத்தை எடுத்து, வீரவாகுவின்மீது எறிந்தான். அவ் வீரன் அதனைத் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/145&oldid=919709" இலிருந்து மீள்விக்கப்பட்டது