பக்கம்:வேலின் வெற்றி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையிலிருந்த வாளால் வெட்டி முரித்தான். பின்னும் ஒரு வச்சிப் படையை விட்டான், தருமகோபன், அப் படையை விரவாகு கையாற் பிடித்துக் கலைமானை அறையும் புலிபோல், அசுரன் மார்பில் அடித்தார். அறைபட்ட தருமகோபன் அடியற்ற மரம்பேற் படியில் விழுந்தான் அவனை ஒரு காலால் உதைத்தார் விரவாத அந் நிலையில் உயிர் துறந்தான் தருமகோபன். அசுரப்படை சிதி ஒடிற்று. மயங்கிக் கிடந்த யானை மெல்லத் தெளிந்து எழுந்தது தருமகோபன் இறந்ததை அறிந்தது. துன்பக் கடலைக் கடந்து கரையேறினாற் போன்று இன்பமுற்றது. மாற்றாரும் போற்றுதற் குரிய வீரவாகுவை நோக்கி, "என் அப்பனே! சிறியேன்மீது சீற்ற்ம் கொள்ளதே என் க்தையைக் கருணை கூர்ந்து கேட்க வேண்டும். யான் திக்கஜங்களுள் ஒருவன் கயவனாகிய இத் தருமகோபனது கடுஞ் சிறையில் அகப்பட்டு நெடுங்காலம் வருந்தினேன். அறநெறியை வெறுக்கும் தருமகோபனை இன்று நீ அழித்தாய், இனி வானவர் கவலை தீர்ந்தார் யானும் பிழைத்தேன், சிறுமை ஒழிந்து சிறப்புற்றேன். இதனினும் சிறந்த ஊதியம் எனக்கு வேறுண்டோ? பழவினைப் பாசத்தினின்று நீங்கி முத்தி பெற்றவரை ஒத்தேன்" என்று கூறி வணங்கிற்று. அதன் வரலாற்றைக் கேட்டு வீரவாகு மகிழ்ச்சியுற்றார்; "இப்பொழுது நின் இருப்பிடம் செல்க' என்று விடை கொடுத்தார். ஆகாய வழியே எழுந்தது, யானை அசுரரைக் கண்டு அஞ்சாது முன்னிருந்த திசையை அடைந்து இன்பமுற்று வாழ்ந்தது. அன்று போர்க்களத்தில் நிகழ்ந்ததை யெல்லாம் தூதுவர் _ வாயிலாக அறிந்த பானுகோபன், மன்னனது .ಕ್ಷ್ಣ ಸ್ಥಾನ குன் கடிதல் திருந்த தந்தையின் அடிகளைத் தன் முடியிற் 5ు சூடி, மெய்யன்போடு அவன் முன்னே நின்று, ‘ஐயனே மாயை தந்த படைக்கலத்தால் பகைவரை மயக்கினேன்; நன்னிக் கடலில் அவரைத் தள்ளினேன். அதனைத் தேவர் வாயிலாகத் தெரிந்தான், முருகன்; உடனே தன் வேற்படையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/146&oldid=919711" இலிருந்து மீள்விக்கப்பட்டது