பக்கம்:வேலின் வெற்றி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை f 39 விடுத்து அவர் அனைவரையும் மீட்டுக்கொண்டான். இத் தகைய குமரனை வெல்லுதல் நம்மால் இயலுமோ? அவன் ஆற்றலை நேரில் தெரிந்த உனக்கு மேலும் சொல்லுதல் வேண்டுமோ? முந்தை நாள் நீயே வேலேந்திய கந்தனோடு போர் செய்து வருந்தினாய் படைத் திறன் இழந்தாய் எளியனாய் நின்றாய்! இங்கு ஓடி வந்தாய்; ஆதலால் உய்ந்தாய். தந்தையே வெம்போர் செய்ய வல்ல வீரர் கிடைத்தால் நான் மகிழ்வேன். இன்று மாற்றா ரோடு போர் புரிய அஞ்சினேன் என்று மனத்திற் கொள்ளதே. மன்னவா. இன்னும் பல்லாண்டு நீ வாழ்ந்திருத்தல் வேண்டும் என்னும் ஆசையாற் பேசினேன், அச்சத்தால் உரைத்தேன் அல்லேன்; உனக்கு உறுதி பயக்கும் மொழி யொன்று கூறுவேன். சிறையினின்றும் வானவரை விட்டுவிடு. விட்டால் முருகவேள் சீற்றம் தீர்வான்; வந்த வழியே சென்றிடுவான்; அப்பால் எல்லையற்ற காலம் நின் பெருஞ் செல்வமெல்லாம் நிலைத்து நிற்கும்" என்றான். அது கேட்ட சூரன் கோபம் தலைக்கொண்டான். "மைந்தா: என்ன பேச்சுப் பேசினாய்? நீ சொன்னவாறு யான் எளியனாய் இன்று வாணவரைச் சிறையினின்றும் விடுவிப்பேனாயின் மன்னர் மன்னன் என்று என்னை யார் மதிப்பார்? மதிப்பு ஒழிவது மட்டுமா? மாயாப் பழியுமன்றோ வந்தடையும்? பிரமன், மால் முதலிய தலைவரும் தேவரும் மதிக்க நான் அரசு வீற்றிருந்து ஆள்கிறேன்; மூவருக்கும் மேலாகிய முழுமுதற் பெருமானிடம் வரம் பெற்றுள்ளேன். இத் தகைய யான் ஆற்றல் அற்றவர் போல்மாற்றாரைச் சிறையினின்று விடுவேனோ? பேரழகும், இளமையும், பெருந்திருவும், வீரமும், சுற்றமும், யாக்கையும், மற்று யாவையும் நிலையற்ற இவ்வுலகத்தில் புகழ் என்னும் ஒன்றுதானே அழியாது நிற்பது? ஆதலால், அமர்க்களத்தில் ஆவியை விட் டாலும் விடுவேன்; அமரரைச் சிறையினின்றும் விடமாட்டேன். சாவு வந்தாலும், சஞ்சலம் வந்தாலும் மானம் துறப்பரோ மாண்புடையோர்? சூரன் என்று பெயர் பெற்ற யான், இரு நாள் சிறந்து இலங்கும் இச் செல்வத்தைப் பெரிதாக மதித்து, பிடித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/147&oldid=919713" இலிருந்து மீள்விக்கப்பட்டது