பக்கம்:வேலின் வெற்றி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 14: நூறாயிரம் வீரருக்கும், ஏனைய மைந்தர் எண்மருக்கும் தலைமை பெற்ற வீரவாகு, பெருந்தேர்மீது ஏறிப் போர் புரிய வந்தார்; சிவகுமாரனாகிய முருகப் பெருமானது. சேவடியைச் சிந்தித்து வணங்கினார்; பின்னர், விரைந்து சென்று, பானுகோபனது சேனைப் பெருங்கடல் நடுங்கத் தன் வில்லை வளைத்தார். பஞ்சபூதங்களுள் நீரும் நெருப்பும் ஒன்றோடொன்று மாறு பட்டுச் சீற்றமுற்றுப் போர் புரிந்தாற்போல வீரவாகுவும் பானு கோபனும் வெம்போர் நிகழ்த்தினர். ஒரு கணப்பொழுதில் இரு வரும் ஏறியிருந்த தேர்கள் பல சாரிகை சுற்றின் வீரவாகு விட்ட பாணங்களைப் பானுகோபன் அழித்தான். பானுகோபன் விடுத்த அம்புகளை வீரவாகு சரமாரியால் ஒழித்தார். அந் நிலையில் சங்கர மூர்த்திபோல் சீற்றமுற்ற வீரவாகு, தம் வாட்படையை எடுத்துக் கறங்குபோற் சுழன்று பானுகோபனை எதிர்த்தார். பானுகோபனும் காற்றுப்போல் விரைந்து வந்து வ்ாட்போர் தொடுத்தான். காலனும் கனலியும் கடும் போர் புரிந்தாற்போல இருவரும் வாட்பேர் செய் தனர். அப்போது பானுகோபன் தான் கற்ற வித்தையின் திறத்தால் வீரவாகுவின் வாட்படையை விலக்கி, அவர் தோளில் வெட்டி னான். வெட்டுண்ட தோளினின்றும் குருதி பொங்கி வடிந்தது. அது கண்டு மகிழ்ந்தான், பானுகோபன். வீரவாகு தோற்றுவிடுவாரோ என்று வானவர் அஞ்சித் தளர்ந்தார்கள். அவ் வேளையில் அறு முகன் திருவடியைக் கருத்திற்கொண்டார், வீரவாகு வாட்படையை வீசினார், பானுகோபனது வலத்தோளை அறுத்தார். அப்போது அசுரன், வலக்கையில் இருந்த வாளை இடக்கையால் எடுத்தான்; பின்னும் பெருஞ்சினமுற்று வாட்போர் புரிந்தான். மாற்றான் முயற்சியைக் கண்ட வீரவாகு, அவன் இடக்கையையும் துணித் தார். அந் நிலையில் மாயப்படை தொடுக்க நினைத்தான், பானு கோபன். அதை உணர்ந்து அவன் தலையை அறுத்துத் தள்ளினார், வீரவாகு. அவ் வீரன் தலையும், மலை போன்ற தோளும் உடலும் மண்மேல் விழுந்தன; அவனுயிர் கவர்ந்த கூற்றுவன், வீரவாகுவின் திறமையைப் புகழ்ந்து தென்புலம் சேர்ந்தான். முனிவரும் தேவரும் பிறரும் ஆடினர்; பாடினர்; ஆர்த்தனர்; வீரருள் வீரன் நீயே என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/149&oldid=919717" இலிருந்து மீள்விக்கப்பட்டது