பக்கம்:வேலின் வெற்றி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 வேலின் வெற்றி வீரவாகுவைப் புகழ்ந்தனர்; அவர்மீது மழை போல் மலர்களைச் சொரிந்தனர். பூதர்களோடும் தம்பியரோடும் பாடி வீட்டை அடைத் தார், வீரவாகு காதலாகிக் கசிந்து கண்ணி மல்கிக் கந்தவேளின் கமல பாதம் பன்முறை பணிந்தார். பானுகோபன் இறந்தான் என்று அறிந்த சூரன் அழுது புலம்பினான், "மைந்தா மத களிறே. தீவினையேன் உள்ளமே உள்ளத்தில் அமைந்த தெள்ளமுதே என் அப்பனே! உன்னைத் தந்தைக்குத் தந்தையில கொன்றானோ? என் ஐயனே! உன்ன்ை இதற் வளர்த்தேன்? அசுரகுல நாயகமே அடைந்தவரை ஆதரிக்கு அருமணியே! என் செல்வமே தெள்ளமுதே! நீ தனியே ே எங்கிருந்தாய்? அங்கே நான் வந்தாலும் உன் அமுத மொழி கேட்பேனோ?" என்று சூரன் புலம்பி அழுதான். அப்போது பானுகோபனது உடலை அசுரர்கள் அங்கே எடுத்து வந்தார்கள். துண்டமுற்ற மைந்தனது உடலைக் கண்டு துடித்தான், சூரன். அவன் தலையைக் கையிலெடுப்பான்; அதன் அழகைப் பார்ப்பான்; அத் தலையைக் கண்களில் ஒற்றுவான்; முத்தம் தருவான் பெருமூச்செறிவான்; பூமியில் விழுந்து புரள்வான். அறுபட்ட தலையையும் தோளையும் உடம்பிலே பொருத்திப் பார்ப்பான்; நிலத்தில் விழுந்து அரற்றுவான்; "என் துன்பத்தைக் கண்டும், உயிரே, நீ இன்னும் இருக்கின்றாயே!” என்று ஏங்குவான். சொல்லரிய சோகமுற்ற சூரன் எளிய நிலை கண்டு எல்லோரும் ஏங்கி அழுதார்கள். பானுகோபன் தாயாகிய பதுமை, சேடியரோடு சென்று, வெட்டுண்டு கிடந்த மைந்தன்மீது விழுந்தாள் மயங்கினாள்: "என் மகனே! இது நான் செய்த பாவமோ? வானவர் விடுத்த சாபமோ? மூவர் கோபமோ? மற்று ஏதோ அறியேன்! அந்தோ வானவர் இந் நகரிலே கந்தனை வருவித்தார்; கடும் போர் மூட்டினார்; என் மைந்தரை யெல்லாம் கொல்வித்தார்; இன்று உன்னையும் வீட்டினாரே, இக் கேடு சூழ்ந்த வானவரின் மாதர் எல்லாம் என்னைப்போல் ஆகுக. ஐயனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/150&oldid=919722" இலிருந்து மீள்விக்கப்பட்டது