பக்கம்:வேலின் வெற்றி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 143 வானவர்க்கு மேன்மேலும் துன்பம் செய்தல் நன்றன்று என்று உன் தந்தையிடம் அன்றே சொன்ன்ேன் அவர் உணர்ந்தாளில்லை. ஐயோ! இன்று உன்னை இழந்தேனே! இனி மன்னன்தான் உயிர் வைத்திருப்பானோ?” என்று அழுது சோர்ந்தாள். அப்பொழுது மன்னன் சோகம் கோபமாக மாறிற்று. பதுமை முதலிய மாதரை மாளிகையின் உள்ளே அனுப்பினான்; அருகே நின்ற அசுரரை நோக்கி, "இன்றே மாற்றார் சேனையை அறுப் பேன்; அவர் குருதியைக் கொண்டு கனல் வேள்வி செய்வேன்; இறந்துபட்ட மகனை எழுப்புவேன். பானுகோபன் உடலைத் தனியிடத்தில் வைத்துப் பாதுகாத்திடுக" எனப் பணித்தான். அப்போது சூரன் தம்பியாகிய சிங்கமுகாசுரன் மகேந்திர - மாளிகையை அடைந்தான் தமையனது பாதம் తణ్ణ பணிந்து வணங்கி, ஐப்னே உன் முகம் வாடியிருக் :ெ கின்றதே என்ன நிகழ்ந்தது?" என்று வினவினான். - து. அது கேட்ட சூரன் கூறலுற்றான்: "தம்பி அன்று நீ - சென்றபின், குன்றம் எறிந்த குமரவேள் படையோடு இந் நகரில் வந்து பாசறை கொண்டான். அவன் நிகழ்த்திய போரில் என் பிள்ளைகள் அனைவரும் இறந்தனர்; அமைச்சரும் அழிந்தனர்; படைகளும் பாழ்பட்டன. அரிமுக வீர நிகழ்ந்தது இதுவே. இன்று நீ படையெடுத்துச் சென்று அந்தக் குமரனை வென்று வரல் வேண்டும். அதற்காகவே உன்னை அழைத்தேன்." சூரன் சொல்லிய செய்தியைக் கேட்ட சிங்கன் மீண்டும் அவனடி பண்ந்து, எழுந்து நின்று, "ஐயனே! ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனைப் பாலன் என்று எண்ணினாய், பழித்துப் பேசினாய். முன்னமே நான் சொல்லிய நன்மொழியும் நஞ்சாயிற்றே ஊழ்வினையை யாரால் வெல்ல இயலும்? இன்று உன் ஆணைப்படி போர்க்களம் செல்வேன். கந்தனை வெல்லப் பெறுவேனாகில், மீண்டும் வந்து காண்பேன். நான் வெல்லா தொழியின் இங்குள்ளார் எல்லாரும் இறந்துபடுவர். உன் மனத்தில் தோன்றியவாறு செய்க" என்று கை கூப்பி வணங்கினான். பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/151&oldid=919724" இலிருந்து மீள்விக்கப்பட்டது