பக்கம்:வேலின் வெற்றி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி.சேதுப்பிள்ளை 145 பொழுதிற் கொன்று, அவரை வாரி வாரித் தின்றாலன்றித் தீருமோ எனது சீற்றம்? மாற்றார் படையை அழித்த பின்னர் அவர் தலைவனாகிய வேலவனையும் வெல்வேன்; வானவர் என்று பேர் பெற்றோரையும் வதைப்பேன்; விரைவில் மூன்றுலகத்தையும் யானே முடிப்பேன்" என்று வஞ்சினம் கூறினான்; தாயாகிய மாயை தந்த கொடும் பாசத்தை எடுத்தான்; அதனை நோக்கி, "மாற்றார் அனைவரையும், ஒரு வழியாகக் கட்டிப் பிடித்து, உதயகிரியில் உய்த்து, அவரை விட்டுப் பிரியாமல் அங்கே காத்துக்கொண்டிரு' என்று சொல்லி வீசினான். いx 、/ - - பல்லாயிரக் கணக்கான பூத வீரரும், வில்வீரர் எண்மரும், மற்றைய தலைவரும், வல்லாளனாகிய வீரவாகுவும் அப்பாசத்தில் அகப்பட்டார்கள். இயற்கையறிவை இழந்து, ஆண்மை யழிந்து, சேர்ந்து கிடந்த வீரர் அனைவரையும் ஆகாய வழியே கொண்டு சென்று, மின்னலைப் போல் பல கடல் கடந்து மேருமலை போல் அமைந்த உதயகிரியிற் புகுந்தது, அப் படைக்கலம். அதை யறிந்த முருகப்பெருமான் போர்க்கோலம் கொண்டு புறப்பட்டார். "மூவர்க்கும் தலைவனாய முதல்வன் வந்தான். முக்கட் பெருமான் மைந்தனாய முருகன் வந்தான். மாற்றாரைக் கொல்லும் மடங்கல் வந்தான். வேற் படையுடைய வீரன் வந்தான். ஏவரும் அறிய வொண்ணா இறைவன் வந்தான். தேவ தேவனாய செவ்வேள் வந்தான்" என்று ஒலித்தன, சின்னம் எல்லாம். அப்போது தீப்பொறி சிந்தும் கண்களோடு நின்ற சிங்கமுகன், "மாற்றானை இன்றே கொன்று சீற்றம் தீர்வேன்" என்று உள்ளத் தில் உறுதி கொண்டு அண்டமும் அகில திக்கும் தானேயாக ஒரு மாயா வடிவம் பூண்டு நின்றான்; முன்னே நின்ற முருகப் பெருமானை நோக்கி, "கடம்பனே! இறைவனிடம் நீ பெற்றுள்ள திடம்படு வேலின் திறமையெல்லாம் அறிவேன். தாரகனைப் போல் போரில் நான் பேதையல்ைலேன் விரைந்து போர் புரிந்து பார் வீரராகிய பூதர் எல்லாம் உயிர் இழந்தார். மற்றையோர் உன் கண்ணெதிரே என் வயிற்றிற் புகுந்து மறைந்தார். தனியனாய் நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/153&oldid=919727" இலிருந்து மீள்விக்கப்பட்டது