பக்கம்:வேலின் வெற்றி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் π. பி. சேதுப்பிள்ளை - #57 தன்னை நோக்கி வந்த வேற்படையைக் கண்ட சூரன் மனம் கலங்கினானல்லன், "சாகா வரம் பெற்றுள்ள என்னை இப் இடை என்ன செய்யும்?" என இறுமாந்து சீற்றம் கொண்டான், நெடுங் கடலின் நடுவே போந்து, நெருப்புப் போன்ற தளிர்களும் புகை போன்ற தழைகளும், பொன் போன்ற பூந்துணர்களும் மரகதம் போன்ற காய்களும், செம்மணி போன்ற கனிகளும் தாங்கி, கார்மேகம் போன்ற ஒரு பெரிய மாமரமாய் நின்றான். மாறுபடு சூரன் மாயத்தால் மாமரமாகி மரக்கடலின் நடுவே நின்ற நிலையும், அவன் உள்ளக் கருத்தும், உடலின் வலியும் கண்டு, வேற்படை கடுஞ்சீற்றம் கொண்டது. ஈசனது நெற்றிக் கண்ணில் எழுந்த நெருப்பிலே உருவாக்கி, அப் பெருமன் திருக்கரத்திலே தாங்கிய தீப்பிழம்பிலே தோய்க்கப்பெற்றது போன்ற வேற்படை, கண்டவர் அஞ்சக் கடிது சென்று மாம்ரத்தை அடியோடு வெட்டி, முரித்தது. - - அடிபட்ட சூரன் அலறி விழுந்தான்; ஆயினும் அழிந்தா னல்லன். தவத்தினும் வலியது வேறுண்டோ? வஞ்சனை வடிவம் அழிந்தவுடன், வெஞ்சினம் கொண்ட சூரன் தன் முன்னைய உருவம் எய்தினான்; உடைவாளை எடுத்துப் போர் புரியக் கருதி ஆரவாரித்தான். - இங்ங்ன்ம் வாளேந்தி உருத்து நின்ற வல்லாளனைத் தாக்கிற்று, வேற்படை அவன் மார்டை இரு கூறாகப் பிளந்து, அலைகடலில் எறிந்து, ஆகாய வழியே சென்றது; அனல் உருவத்தை விட்டு, அருள் உருவம் கொண்டது; வானவர் சொரிந்த பூமாரியின் இடையே விரைந்து சென்றது. ஆகாய கங்கையிற் படிந்தது; மீண்டும் முருகப் பெருமானது செங்கையில் வந்து அமர்ந்தது. - வேலாற் கூறுபட்ட பின்னரும் ஈசனது வரத்தின் தன்மையால் சூரன் இறவாதிருந்தான். இரு கூறும் சேவலும் மயிலும் ஆயின. இரண்டும் சினங்கொண்டு முருகவேளை நோக்கிப் போர்புரிய வந்தன. சேவலும் மயிலுமாக வந்த சூரனைக் கண்ணுற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/165&oldid=919752" இலிருந்து மீள்விக்கப்பட்டது