பக்கம்:வேலின் வெற்றி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 வேலின் வெற்றி செவ்வேள். கருணை வாய்ந்த திருக்கண் நோக்கம் பெற்றபோது சூரன் பகைமை நீங்கிப் பண்புற்றான். தீமை செய்தவரும், முருகப் பெருமான் முன்னே சென்று சேர்ந்தால் தூயவராவர்; மேலான் சிவகதி அடைவர் என்பதற்கு வேறு சான்றும் வேண்டுமோ, கேடிழைத்து கொடும்போர் செய்த சூரனும் அருள் பெற்று உய்ந்த கதையொன்று போதாதோ? அறுமுகப் பெருமான், மெய்யறிவு பெற்ற சேவலை நோக்கி, "நீ நமது தேரிலே கொடியாக நின்று கூவுக" எனப் பணித்தார். உடனே சிறகடித்து எழுந்து கொக்கறுகோ என்று கூவிற்று அக் கோழி, அந் நிலையில் இந்திரனாகிய மயிலினின்றும் இறங்கினர் முருகன், மெய்யுணர்வு பெற்று நின்ற சூர மயில்மீது ஏறி, எம்மைச் சுமப்பாயாக" என்று கூறி, அதனை விண்ணிலும் மின் னிலும் நடத்தினார். வேற்படை தாங்கய முருகன சூாபபகை முடிதது, அழகிய மயில்மீது வரக்கண்ட பூதரும், வீரரும், வீரவாகுவும் ஆர்வமுறச் சென்று அடிபணிந்து சூழ்ந்தார்கள் "எம் ஐயனே நெடுங்கடலின் நீரைக் குடிக்க வடிவேல் விடுத்தாய்; அப் படையால் சூர் அறுத்தாய் நின் அடியாரைப் பற்றி நின்ற வல் வினையின் வேர் அறுத்தாய்; இனி எமக்குக் குறையொன்றுண்டோ?" என்று எல்லோரும் பரவிப் புகழ்ந்தார்கள். அது கேட்ட குமரவேள், திருமால், பிரமன் முதலிய தேவர்க்கு அருள் புரிந்தார். மன்னன் இறந்தான் என்ற சொல் செவியிற் பட்டதும், இடியினால் அடி பட்ட நாகம் போல் உயிர் துறந்தாள் அவன் தேவியாகிய பதுமை, தலையாய அன்பின் தன்மை அது வன்றோ? மற்றைய மனைவிகள் நெருப்பில் இறங்கி இறந்தனர். இது நிற்க, குரன் இரு கூறாகி வீழ்ந்ததும் சேவலும் மயிலும் ஆகிச் செவ்வேளிடம் சென்றதும் கண்டு ®೮೯ರ್u கலங்கினான், அவன் மைந்தனாகிய இரணியன் “ வானவிதியில் நின்று அவன் புலம்பலுற்றான். என் அரசே! அன்றே நான் சொன்னேனே என் மொழியை நன்றென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/166&oldid=919755" இலிருந்து மீள்விக்கப்பட்டது