பக்கம்:வேலின் வெற்றி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை j63 யானையோடு தமது திருகோயிலிற் புகுந்தார். விண்ணுலகத்தி லுள்ள பொன்னகரம், சூரன் மகனாகிய பானுகோபனால் அழிந்து பொடிபட்டதையும் இந்திரன் மனத்தில் எழுந்த விருப்பத்தையும் அறிந்தார், முருகவேள் உருவழிந்த பென்னாட்டை முன்போல் ஆக்கத் திருவுளங் கொண்டார் வித்தகனாகிய் தெய்வத்தச்சனை நோக்கி, "துயர் ஒழிந்த இந்திரன் அளவற்ற செழுமையுடன் அமர்ந் திருக்குமாறு பொன்னாட்டை முன்னிருந்தவண்ணம் ஆக்குவாய்" எனப் பணித்தார். "அப்படியே செய்வேன்" என்று அவன் வணங்கிச் சென்றான். திருமகளுக்குப் புகலிடமாகுமாறு அவன் ப்ொன்னகரை மீளவும் ஆக்கினான் என்றால், அதன் செழுமையை உரைக்க ஒண்னுமோ? அப்பொழுது முருகப்பெருமான், பிரமன் முதலிய தேவர் களைக் கருணையோடு நோக்கி, "இந் நகரில் இருந்து அரசு புரிதற் குரிய இந்திரனுக்கு இன்றே திருமுடி சூட்டுக" என்றார். உடனே அன்னார் அதற்கு உரிய அனைத்தும் சேகரித்தனர்; கங்கையாற்றின் நீரால் இந்திரனுக்கு அபிஷேகம் செய்தனர்; அவனை ஆடையணி களால் அலங்களித்தனர்; சாந்தமும் மாலையும் அணிந்தனர்; அரியாசனத்தில் அமர்த்தி அழகிய மகுடம் சூட்டினர். விண்ணவர் வேந்தனாகிய இந்திரன் முருகவேளின் முன்னே சென்றான்; வந்தனை புரிந்து வணங்கினான்; "வானவர் நாட்டின் அரசும் செல்வமும் வழ்ங்கிய எந்தாய்! வாழ்ந்தேன் யான்; என்னினும் பெருவ்ாழ்வு இன்னொருவருக்கு உண்டோ?" என்று ஆர்வமொழி பேசினான். அது கேட்ட முருகவேள் அருள் புரிந்தார். இந் நகரில் நன்றாக அரசு புரிந்துகொண்டிரு" என்று திருவாய் மலர்ந் தார், தேவர்களை அவரவர் இடங்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்; தெய்வயானையோடு தாமும் தமது திருக்கோயிலை அடைந்தார். -- கடம்பமாலை யணிந்த குமரவேள் காதலுற்று விளையாடிய வள்ளி மலையொன்று தமிழ் நாட்டிலே உண்டு அதற்கு திருமணம் வள்ளிமலை யென்பது பெயர். அதன் பெருை சொல்லும் தரத்த தன்று. பல வகையான வளங்களை உடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/171&oldid=919767" இலிருந்து மீள்விக்கப்பட்டது