பக்கம்:வேலின் வெற்றி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#64 வேலின் வெற்றி அம் மலை. அங்கு வேடர் வாழ்ந்த குறிச்சி ஒன்று விளங்கிற்று அன்னவர் தலைவனாய் அரசு செய்தவன் நம்பிராசன் என்ற வேடன். அவனுக்கு ஆண் மக்கள் இருந்தனர். பெண் குழந்தை வேண்டும் என்று அவன் ஆண்டவனைத் தொழுதான். அப்பொழுது முருகப் பிரான் அருளால் நம்பியும அவன் மனைவியும் பணியாள்களோடு பசுந் தினைப்பயிர் நிறைந்திருந்த புனத்திற் புகுந்தனர். அங்கு ஒரு மெல்லிய குரல் அவர் காதில் விழுந்தது. உடனே அவ் வொலி எழுந்த இடம் நோக்கி நடந்தனர். வள்ளிக்கிழங்கெடுத்த குழியில் சுடரொளி போன்ற ஒரு குழந்தையைக் கண்டான் நம்பி வேட்ன் அதனை எடுத்தான் அக மகிழ்ந்தான் வள்ளி என்று பெயரிட்டான், மனைவியின் கையிற் கொடுத்தான்; அம் மகவுடன் மனையாளையும் அழைத்துக் கொண்டு தினைப்புனங் கடந்து குறிச்சியை அடைந்தான். நம்பிராசன் மனையில் வளர்ந்த அப் பெண் மங்கைப் பருவ மடைந்தாள். வேடர் குல முறைப்படி அக் கன்னியைத் தினைப் புனங் காவல் செய்ய அனுப்பினார்கள். மலை நிலத்திற்குரிய கிளி களும், மயில்களும், பிற நிலங்களுக்குரிய பறவைகளும், விலங்கு களும் அப் புனத்தில் வந்து பொருந்தின. பூவைகாள், ஆலோலம் புறாக்களே, ஆலோலம் மயில்க்ளே, ஆலோலம் கிளி களே, ஆலோலம் குயில்களே, ஆலோலம் சேவல்களே, ஆலோலம்' என்று பறவைகளை ஒட்டிக்கொண்டிருந்தாள். அப் பாவை. இப்படி அவள் திணைப்புனங் காத்து வருகையில், கயிலையங்கிரியைச் சார்ந்த கந்த மாமலையை விட்டு முருகப் பெருமான் தமியராய்த் தணிகை மலையை வந்தடைந்தார். காலிலே கழல் இடையிலே கச்சு, மாலையணிந்த தோளிலே வில்; அதற்குரிய அம்பு, கரிய தலை; நெடிய மேனி - இந்த வேட்டுவக் கோலத்திலே தோன்றினார், முருகவேள் வளமார்ந்த வள்ளி மலைக்குச் சென்றார்; திணைப்புனங் காத்துக்கொண்டிருந்த வள்ளியைக் கண்டார், புதையல் கண்டவர்போல் பெருமகிழ் வுற்றார்; மேகத்திற் பொருந்திய மின்னல்போல் கருமலைச் சாரலிற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/172&oldid=919769" இலிருந்து மீள்விக்கப்பட்டது