பக்கம்:வேலின் வெற்றி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வேலின் வெற்றி அப்போது முருகப் பெருமான், வேங்கையுருவத்தை விட்டர் அழகிய மானிட வடிவம் கொண்டு மங்கையின் கண்ணெதி.ே தோன்றினார். "மானின் விழி மாதே பாவியேன் உன்னை விட்டுப் பிரிய வல்லேனோ? உயிரை விட்டு உடல் இயங்குமோ? மெல் லியல் மாதே இத் தினைப்புனம் காத்தல் உனக்கு இழிவாகும் என்னுடன் வருவாயாயின் உன்னை வானுலகத்தில் வைப்ப்ேன் அங்குள்ள தேவ மாதர் எல்லாம் உன்னைத் தொழுது நிற்பர் செல்வங்கள் யாவும் பெற்றுச் சிறப்பாக வாழ்வாய்” என்று பேசி நின்றார், பெருமான். அவர் மனக் கருத்தை யறிந்தாள், மங்கை; நாணமுற்றாள்; ஒரு மொழி பேசலுற்றாள். ‘ஐயரே! நான் இழிந்த குலத்தைச் சேர்ந்தவள்; உலக மெல்லாம் காத்தருள்கின்ற அரசர் நீர் என்மீது காதல் கொண்டு தாழ்மையான மொழிகளைப் பேசுதல் உமக்குத் தகுமா? இது பழி யாகுமே யன்றி முறையாகுமா?" என்று பேசி நின்றாள். அப்பொழுது அவள் நெஞ்சம் திடுக்கிடத் தொண்டகமும் துடியும் முழங்கின; வேடர் கூட்டத்தோடு நம்பிராசன் துரத்தில் வரக் கண்டாள். "ஐயோ! பொல்லாதவர் இவ் வேடர்; இங்கு நில்லாது ஓடிவிடும்" என்று கூறினாள். அம் மொழி கேட்ட முருக வேள் பெரு மகிழ்ச்சியடைந்தார் சைவ நெறிக்குப் பொருத்தமான தவக்கோலம் கொண்டு விருத்தராய் வேடரை நோக்கிச் சென்றார். நம்பிராசன் எதிரே போய் நின்றார். அன்போடு திருநீறு அளித்தார்; "உன் வீரம் ஓங்குக; வெற்றி உயர்க, வளம் பெருகுக" என்று வாழ்த்தினார். திருநீறளித்து ஆசி கூறிய பெரியவரைப் பணிந்து வணங்கி னான், நம்பி. ‘ஐயரே விருத்தராகிய நீர் இம் மலையை வந்தடைந் தீர் உமக்கு வேண்டியதைச் சொல்லும்" என்று வினவினான். அது கேட்ட முருகவேள், “அரசே என் கிழத்தன்மை ஒழிய வேண்டும்; மனத்திலுள்ள மயக்கம் தெளியவேண்டும்; ஆதலால், இங்குள்ள குமரியாட விரும்பி வந்தடைந்தேன் என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/174&oldid=919773" இலிருந்து மீள்விக்கப்பட்டது