பக்கம்:வேலின் வெற்றி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை #87 அப்போது அரசன், "ஐயரே! நீர் சொல்லிய நல்ல தீர்த்தத்தால் நாள்தோறும் நீராடி, தனியளாய்த் தினைப்புணங் காத்திருக்கும் என் பெண்ணுக்குத் துணையாகி இங்கேயே இரும்" என்றான். "நல்லது" என்றார், பெரியவர். நம்பிராசன் வள்ளியிடம் சென்று, தினையும் கிழங்கும் மாவும் கனியும் மற்றைய பண்டங்களும் கொடுத்து, கிழவரை அவளுக்குத் துணையாக வைத்து அவ்விடத்தை விட்டு அகன்றான். அப்போது கிழவர் மங்கையை நோக்கி, "ஐயோ! நான் என்ன செய்வேன்! பசி நோய் என்னைப் பிடித்து வருத்துகின்றதே!" என்றார். அவர் பசி தீர்த் தேனும் கனியும் தினைமாவும் தன் செங்கையாற் கொடுத்தாள், மங்கை, அவற்றை யுண்ட கிழவர், "வெயில் அதிகமாயிற்று தாகம் உண்டாகின்றது" என்றார். தாகத்தைத் தீர்ப்பதற்காக அவரை அழைத்துச் சென்றாள், வள்ளி; பல குன்றுகளைக் கடந்து இனிய சுனையொன்றைக் காட்டினாள். அந் நீரைப் பருகினார் கிழவர் பேசத் தொடங்கினார். “மாதே என் அரும் பசியைத் தீர்த்தாய்! கடுந் தாகத்தைத் தணித்தாய் இன்னும் என் தளர்ச்சி நீங்கவில்லையே! நான் கொண்ட மோகத்தைத் தணிப்பாயாயின் என் குற்ை முற்றும் தீர்ந்துவிடும்" என்றார். "ஐயோ! நரைத்த தலையுடையீர்! உமக்கு நல்லறிவு சற்றும் இல்லையே! இத்தனை நாள் வாழ்ந்து, மூத்ததனால் என்ன பயன்? இழி குலத்தவளாகிய என்னைக் காதலித்துப் பித்துக்கொண்டவர் போல் பிதற்றுகின்றீர்! இவ் வேடர் குலத்திற்கெல்லாம் பெரும் பழியைத் தந்தீர்! பேசத் தெரிந்த பெரியவரே! நான் போகின்றேன். பறவைகளும் விலங்குகளும் தினைக் கதிர்களைத் தின்றுவிடும். நீர் பின்னே நடந்துவரும்" என்று சொல்லிப் புறப்பட்டாள், வள்ளி. பொன் போன்ற மங்கை போகக் கண்டார், முருகன், இனி என்ன செய்வது என்று ஏங்கினார். தன்னிகரில்லாத தந்திமுகத் தமையனை மனத்திலே நினைத்தார். தம்பிக் கிரங்கி விநாயகர் வெளிப்பட்டார்; திரும்பிச் செல்லும் வள்ளியின் முன்னே மல்ை போன்ற யானை வடிவங் கொண்டு, அலைகடல்போல் முழங்கிக்கொண்டு வந்தார். யானையைக் கண்டபோது அஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/175&oldid=919775" இலிருந்து மீள்விக்கப்பட்டது