பக்கம்:வேலின் வெற்றி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68. வேலின் வெற்றி நடுங்கினாள், மங்கை, கிழவரை நோக்கி ஓடினாள்; "ஐயனே நீர் சொன்னபடி செய்வேன்; இந்த யானையினின்றும் என்னைக் கத்தருள வேண்டும்" என்று பதறி, அவர் பக்கத்திற் சென்று கட்டித் தழுவிக்கொண்டாள். காரியம் முடிந்ததென்று கந்தவேள் களிப்புற்றார்; காலத்தில் வந்து உதவிய யானைக்கு வந்தனம் அளித்தார், "எம்பெருமானே! உம்மால் மயக்கம் தீர்ந்தேன்; மங்கையையும் மருவப்பெற்றேன். இனி நீர் உம்மிடத்திற்கு எழுந்தருள்க" என்று விடை கொடுத்து அனுப்பினார். தமையனார் சென்ற பின்பு முருகவேள் கன்னியை அழைத்துக்கொண்டு ஒரு பூஞ்சோலையிற் புகுந்தார், மனங்கலந் தார்; அருள்புரிந்தார். தமது இயற்கைத் திருவுருவைக் காட்டினார். ஆறுமுகமும், பன்னிரு தோளும், வடிவேல் முதலிய படை யும், அழகிய தோகைமயிலும் உடையராய் முருகப் பெருமான் காட்சியளித்தார். அத் திருவுருவைக் கண்டாள், கன்னி, கை கூப்பித் தொழுதாள் வாயார வழுத்தினாள் வியப்புற்று நடுங்கி னாள்; மேனி வியர்த்தாள்; ஆராத அன்புடன் பேசலுற்றாள்; "வேலவரே இவ் வுருவத்தை முன்பு காட்டாமல் இத்துணைக் காலமும் கொன்னே கழித்தீரே கொடியவளாகிய உம் அடியாள் செய்த குற்றமெல்லாம் பொறுத்து ஆட்கொள்ள வேண்டும்" என்றாள். அப்போது முருகவேள் மங்கையை நோக்கி, "மாதே. நீ தினைப் புனத்திற்குச் செல்க. நாமும் அங்கு வருவோம்" என்று உரைத்தார். அவ்வாறே ஆண்டவன் அடி பணிந்து, விடைபெற்றுப் போயினாள், வள்ளி, தினைப் புனத்தில் தலைவனைக் காணப் பெறாது தளர்ந்திருந்தாள். இளந்தினைகள் முதிர்ந்து முற்றிவிட்டன. விளைந்த கதிரை அறுப்பதற்கு வேடர் விரைந்து நிறைந்தார்கள். அவர்கள் வள்ளியை நோக்கி, "நாயகி, தினைகள் விளைந்தன. அவற்றைக் கண்டு வேங்கை மரங்களும் மலர்ந்தன. இதுவரையும் திணைப்புனங் காத்து நீ வருந்தினாய். இனி ஊருக்குச் சென்றிடு, அம்மா"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/176&oldid=919777" இலிருந்து மீள்விக்கப்பட்டது