பக்கம்:வேலின் வெற்றி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை #69 என்றுர்ைத்தனர். அப்போது மங்கை, மானையும் மயிலையும் கிளியையும் புறாவையும் மற்றைய பறவைகளையும் பார்த்து, "நான் போகின்றேன். இச் செய்தியை இங்கு வரும் முருகப் பெருமானிடம் சொல்லுங்கள்" என்று கூறி, மன வருத்தத்தோடு அவ்விடத்தை விட்டு அகன்றாள். வீட்டிலே இருந்தாள், வள்ளி. தினையை அறுத்து மனையிற் சேர்த்தனர், வேடர். காதலராகிய முருகவேள் தினைப்புனத்திற்குச் சென்றார். அங்கு மங்கையைக் காணாது மையலாற் புலம்பலுற்றார்; "இங்கிருந்த மங்கை எங்கே சென்றாள்" என்று மேகத்தைக் கேட் பார் மயிலினங்களைக் கேட்பார் தினைப்புனத்தைக் கேட்பர்; பூவையைக் கேட்பார் கிளியைக் கேட்பார் யானையைக் கேட்பார்: மானைக் கேட்டார்; சோலையைக் கேட்டார்; மலையைக் கேட்பர். பகற் பொழுதெல்லாம் மங்கையை நாடுவார்போல் மயங்கி நின்று திணைப்புனத்தைச் சுற்றி திரிந்த முருகவேள், நள்ளிரவில் வேடர் வாழும் குறிச்சியிற் புகுந்து, நம்பி ராசனது குடிசையின் புறத்தே சென்று நின்றார். அங்கே மங்கை வந்து பெருமானை வணங்கினாள்; "ஐயோ! பாவியேன் பொருட்டால் இந்த நள்ளிர வில், சிறு தொழில் புரியும் வேடர் சேரியில் திருவடி வருந்த நடந்து வரலாமா?" என்று பரிவுடன் பேசிப் பணிந்து நின்றாள். அந் நிலையில் முருகவேளை வள்ளியின் தோழி கண்டு, "எம் ஐயனே! இவ் வேடர்கள் கொடியவர்கள். உம்மைக் கண்டால் தின்மை விளையும். ஆதலால், இம் மங்கையை இப்பொழுதே உமது ஊருக்கு அழைத்துச் சென்று காத்தருளல் வேண்டும்" என்று கூறி, நாயகியைத் தலைமகனிடம் அடைக்கலமாக அளித்தாள். கால்த்தில் உதவி செய்த தோழியைக் கருணையோடு நோக்கினார், முருகவேள்; "மாதே, எம்மிடத்தில் நீ வைத்த கருணையை எந்நாளும் மறவோம்” என்று திருவாய் மலர்ந்தார். தோழி விடை பெற்றுச் சென்றாள். முருகவேள் வள்ளியை அழைத்துக்கொண்டு நள்ளிருளிலே நடந்தார், வேடர் குறிச்சியின் கட்டும் காவலும் கடந்தார்; காதல் விளைக்கும் ஒரு பெருஞ் சோலையிற் சென்று சேர்ந்தார். - > -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/177&oldid=919779" இலிருந்து மீள்விக்கப்பட்டது