பக்கம்:வேலின் வெற்றி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#70 வேலின் வெற்றி நம்பிராசன் மனைவி. காலையில் எழுந்தாள். நங்கையைக் காணாது திகைத்தாள்; எங்கும் சுற்றித் தேடினாள் தோழியை வந்து கேட்டாள். "நேற்றிரவு வள்ளியும் நானும் கண்ணுறங்கச் சென் றோம். அதற்குப் பின் அவள் செய்ததொன்றும் நான் அறிந் திலேன், அம்மா என்றாள், தோழி. வேடர் யாவரும் வந்து கூடினர் விரைந்து சென்று தம் வேந்தனைக் கண்டனர் கொம்பு ஊதினர் பல வழிகளிலும் ஓடினர்; சோலைகளையெல்லாம் நாடினர்; திணைப்புனங்களிற் புகுந்து தேடினர்; காலடித் தடங்களை நோக்கித் தொடர்ந்தனர். கோலும் வில்லும், குந்தமும் வாளும், மழுவும் பிண்டி பாலமும் கொண்டு பலவிடங்களிலும் தேடிய வேடர்கள், முருகவேள் வள்ளியோடிருந்த சோலையை நோக்கி வந்தார்கள். அப்போது மங்கை திடுக்கிட்டாள் மனங் கலங்கினாள்: "இனிமேல் என்ன செய்வது?" என்று வினவினாள். அது கேட்ட முருகவேள், "மாதே மனம் வருந்தாதே, மாய மலையைத் தகர்த்த வேல், சூரன் மார்பைத் துளைத்த வேல் என்னிடம் இருக்கின்றது. உன்னைச் சேர்ந்த வேடர்கள் போர் புரிய வந்தால் அவரை அழிப்போம். நம் பின்னே நின்று நீ அச் செய்கையைப் பார் என்று அருளினார். நம்பிராசனும் வேடரும் அலைகடல்போல ஆரவாரித்தனர்; வில்லை வளைத்தனர்; சரமாரி பொழிந்தனர், செங்கதிரோனைக் கருமேகம் மறைத்தாற் போன்று முருகப்பெருமானை வளைந்தன்ர். அவர்கள் வெம்மையோடு விட்ட அம்புகள் எல்லாம், கட்டழகு வாய்ந்த கருணையாளன்மீது மெல்லிய பூப்போல் விழுந்தன. அவ் வம்புகளைக் கண்ட வள்ளி மனம் நடுங்கி, "ஐயனே! இவ் வேடர்களை வேலால் அழித்திடல் வேண்டும். அரிமான் சும்மா இருந்தால் அதனை மரையும் மானும், பன்றியும் யானையும் நெருங்கிவிடுமே!" என்று சொல்லிய பொழுது, எம்பிரான் அருளால் அருகே நின்ற சேவல் ஒன்று, நிமிர்ந்து எழுந்து, கொக்கரித்தது. அவ் வொலி செவியில் விழுந்ததும், நம்பிராசனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/178&oldid=919781" இலிருந்து மீள்விக்கப்பட்டது