பக்கம்:வேலின் வெற்றி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 171 அவன் மைந்தரும், சுற்றத்தாரும் மடிந்து மாண்டு மண்மேல் விழுந்தனர். விழுமிய சோலையில் விழுந்துபட்ட வேடர்மீது கருணை கொண்டார், முருகவேள், வள்ளி நாயகியை நோக்கி, "நம்மைப் பகைத்துப் போர் புரிந்து இறந்த உன் சுற்றத்தையெல்லாம் எழுப்புக" என்று அருளிச்செய்தார். அதற்கு இசைந்து, நங்கை, நாயகனை வணங்கி, "உயிரிழந்த நம் கிளைஞர் எல்லாம் எழுக" என்று அருளினாள். அந் நிலையில் உறங்கி எழுந்தவர் போல் நம்பியும் பிறரும் எழுந்தார்கள். அன்னவர் கண்ணெதிரே, முருகப் பெருமான், கருணை பொழியும் ஆறுமுகங்களோடும், பன்னிரு கரங்களோடும், வேல் முதலிய பன்னிரு படைகளோடும் தோன்றினார். அக் காட்சியைக் கண்டார், வேடர் ஆச்சரியமடைந்தார்; அடியில் விழுந்தார்; எழுந்தார்; போற்றினார்; "ஐய்னே வலிமை சான்ற வேடர் சேரியைக் காத்தருளும் மெய்யனே! எங்கள் குலக் கொடியைக் களவு முறையிலே கவர்ந்தீர் குலத்தின் வரம்பினை அழித்தீர்! தீராத வசையைத் தந்தீர்" தாயே பிள்ளைக்கு நஞ்சை ஊட்டினால் தடுப்பவர் யார்? அத்தனே போனது போகட்டும். ஆசையால் எங்கள் பெண்ணை இங்கே கொண்டுவந்தீர். இனி எங்கள் சிற்றுருக்கு எழுந்தருளி, அங்கி சாட்சியாக இவளை மணந்து உமது ஊருக்குச் செல்ல வேண்டும்" என்றார். - மாமனாகிய நம்பிராசன் சொல்லியவாறே மணம் செய்து கொள்ள இசைந்தார், முருகவேள், உடனே வள்ளி நாயகியை அழைத்துக்கொண்டு நாரத முனிவ்ரோடு நடந்து, வேடர் சேரியை அடைந்தார். மாமனார் மனையில் அமர்ந்தவுடன், அருகேயிருந்த மங்கையை முருகன் அருள் கூர்ந்து நோக்கினார். அப்போது குறக் கோலம் நீங்கிற்று; தெய்வக் கோலம் வந்துற்றது. நல்ல முகூர்த் தத்தில் நம்பிராசன் கந்தவேள் திருக்கரத்தில் கன்னியின் கரத்தை வைத்து, "எங்கள் மாதவத்தால் வந்த இம் மங்கையை அன்புடன் தந்தேன்; கொள்க’ என்று தண்ணிரால் தாரை வார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/179&oldid=919783" இலிருந்து மீள்விக்கப்பட்டது