பக்கம்:வேலின் வெற்றி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172. வேலின் வெற்றி திருமணம் நிகழும் வேளையில் திருமாலும், பிரமனும், இந்திரன் முதலிய வானவரும் சூழ்ந்து நிற்க, தேவதேவனாகிய சிவபெருமான் உமா தேவியாரோடு வானிலே நின்று திருக்கண் சத்தினார்; அருள் புரிந்தார். திருமால் முதலிய தேவர்கள் பேரனந்தமுற்று, நறுமலர் தூவி, முருகப்பெருமானை வணங்கித் துதித்து ஆரவளித்தனர். அப்போது ஆறுமுகக் கடவுள் எழுந்தார்; நம்பிராசனை நோக்கி, "வள்ளியோடு நாம் செருத்தணி மலையில் இருக்க விரும்புகின்றோம்" என்றார். நல்லது என்று நம்பியும் இசைந்தான். செருத்தணி மலையை வந்து சேர்ந்தபோது, வள்ளியம்மை கந்தவேள் அடி பணிந்து, "ஐயனே இந்த மலையின் தன்மையைச் செல்ல வேண்டும்" என்று விண்ணப்பம் செய்தாள். அவள் வேண்டுகோளுக்கு அன்புடன் இசைந்து, "மாதே; திருத்தணிகை என்னும் பெயருடைய இக் குன்றம், நம்மால் செருத்தணி என்ற மங்கலப் பெயர் பெற்றது. செருக்களத்தில் சூரன் செய்த போரும், வள்ளி மலையில் வேடர் செய்த போரும் விளைத்த சீற்றம் தணிந்து இங்கு நாம் வந்திருத்தலால் இது செருத்தணி யாயிற்று. மந்தரம் என்னும் மலையும் மேரு மாமலையும் இருப்பினும், கயிலாய மலையைச் சிவபெருமான் விரும்பியவாறே, இவ் வுலகில் அழகிய மலைகள் பல இருப்பினும் எமக்கு இந்த மலையிலே தனி விருப்பம் உண்டு. இதனைத் தொழுபவர் பாவம் தீர்வர்; பண்புறுவர். மனத்திலே அன்பு கொண்டு இம் மலையை வந்து அடைந்து, முகப்பிலுள்ள சுனையிலே முறைப்படி நீராடி, நம்மை வழிபடும் அடியார் என்றும் நம் பதத்தில் வாழ்வார் என்றார், முருகவேள், ஒரு நாள், திருத்தணிகை மலையினின்றும் புறப்பட்டு, முருகவேளும் வள்ளி நாயகியும் விமானத்திலேறி, வெள்ளியங் கிரியின் அருகே யமைந்த கந்த மாமலையில் சென்று சேர்ந்தார்கள். விமானத்தை விட்டிறங்கி, இருவரும் அழகிய பொற்கோயிலின் உள்ளே புகுந்து, இந்திரன் புதல்வியாகிய தேவயானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/180&oldid=919786" இலிருந்து மீள்விக்கப்பட்டது