பக்கம்:வேலின் வெற்றி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. சேதுப்பிள்ளை . $3. வேற்றாவிடினும், நான் தவத்தினை விடுவேனோ? இத் தவம் போதாதாயின் இன்னும் கொடிய நோன்புகளை மேற் கொள்வேன்; உயிரையும் விடுவேன். நீ சால முதுமையுற்றாய்; ஆதலால் மயக்கம் கொண்டாய். அன்றிப் பித்துக் கொண்டு பேசுகின்றாயோ?" என்றாள். உமையவள் சீற்றத்தை உணராதவர்போல் முதியவர் மேலும் பேசலுற்றார். "மாதே அச் சிவபிரான் ജ്ഞഥങ്ങl 感 அறிந்திலை போலும்! அவன் உடுப்பது தோலாடை ஏறுவது வெள்ளேறு அணிகலன் அரவும், பிறவும் கையில் எடுப்பது கபாலம்; உண்பது நஞ்சு, நடமாடும் இடம் சுடுகாடு. அவனுக்குத் தாயில்லை; தந்தையில்லை; சுற்றத்தார் யாரும் இல்லை; வடிவம் இல்லை; குணமும் இல்லை. முன்னே சொல்லிய தோலாடை போன்ற பொருள்களே அவனிடம் பலவுண்டு. அவற்றைப் பெற விரும்பித்தான் தவம் செய்து மெலிகின்றாயோ? பழமையும் பெருமையும் வாய்ந்த மலையரசன் திருமகளாய்த் தோன்றிய உனக்கு இது தகுமோ?" என்று பேசினார். அந் நிலையில் சிவ சிவ என்று செவிகளைப் பொத்திக்கொண்டு, "கிழவா கேள். அந்தமில்லாத எம்பிரானிடத்து உனக்கு அன்பு இறையளவும் இல்லை. காட்டிலுள்ள புதரிலே மறைந்து நின்று பறவை பிடிக்கும் வேட்டுவனைப் போல் நீ சிவ வேடம் கொண்டாய். உன்னைப் போல் நேசமின்றி ஈசனை இகழ்ந்து பேசிய தக்கன் பட்ட பாட்டை நீ அறியாயோ? என் முன்னே நின்று அப் பெருமானை ஏளனம் செய்தாய். இத்தனை வயது சென்றும், இன்னும் மாசற்ற மறைகளில் ஒன்றும் நீ அறிந்திலை போலும் இங்கே நீ நிற்றல் ஆகாது" என்று சீற்றமுற்றாள், உமையம்மை. அறப்பெருஞ் செல்வி இங்ங்ணம் பேசியபோது, "அணங்கே உன்னிடம் ஆசையுற்று இங்கு வந்தடைந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/21&oldid=919795" இலிருந்து மீள்விக்கப்பட்டது