பக்கம்:வேலின் வெற்றி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - வேலின் வெற்றி, பின்பு, பார்வதியம்மையாருடைய அன்பையும் காதலையும் মঞ্চৰ্চা ചാക്കു **"C" அறியக்காட்டத் திருவுளங் காணுதல் கொண்டார் তন্ম செக்கச் சிவந்த ಹ। - புடை உடுத்தார்; சிகையை முடித்தார்; வெண்ணிறு அணிந்தார்; கமண்டலத்தைக் கையில் எடுத்தார்; ஒலைக்குடையைப் பிடித்தார்; நெடுங்கழியை ஊன்றினார்; விருத்தர் போன்ற வடிவம் கொண்டு சென்றார். மலையரசன் மகள் தவம் புரியும் சாலையை அவர் அடைந்த பொழுது, அங்கு வாயில் காத்து நின்ற மாதர்கள் அவரைப் பார்த்து, "தளர்ந்த நடையுடைய பெரியவரே இம் மலையிடை வருதல் எளிதன்றே இங்கே நீர் வந்த காரணம் யாது?’ என்று வினவினர். அது கேட்ட விருத்த வேதியர், "இம் மலையரசன் புதல்வி செய்யும் தவத்தை அறிய விரும்பி இங்கு மனமகிழ்ந்து வந்தோம்” என்றார். அந் நிலையில், அவரைப் பணிப்பெண்கள் தவச்சாலையி னுள்ளே போகவிட்டார்கள். அங்கு நின்ற நங்கையை விருப்புடன் பார்த்தார், வேதியர் "சொல்லுதற்கரிய பேரழகு அழியவும், அங்கமெல்லாம் வற்றி ஒடுங்கவும் நீ அருந்தவம் செய்கின்றாயே! எப்பொருளை விரும்பி இத்தவம் செய்கின்றாய்?" என்று வினவினார். ‘ஐயனே! மன்னுயிர்க்கு உயிராகிய ஈசனை மணாள னாகப் பெற்று, அவர் பாதத்தில் இருக்கக் கருதியே இக் கன்னி மெய்த்தவம் இயற்றுகின்றாள்" என்று மங்கையின் தோழி மறுமொழி கூறினாள். அது கேட்ட முதியவர் நகைத்து, "உலகத்தை யெல்லாம் படைக்கும் பிரமனும், காக்கும் ம் தேடுதற்கரிய தேவதேவன், இவள் செய்யும் ? வந்தாலும் இவளை விரும்பி மணம் உமையவள் தவம் புரிகின்றாள். சங்கரன் எளிதில் அருள்வானோ?" என்றார். அம் மொழி கேட்ட உEையவள் சீற்றங்கொண்டு "என்றும் உள்ள எம்பெருமான் என் விருப்பத்தை நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/20&oldid=919793" இலிருந்து மீள்விக்கப்பட்டது