பக்கம்:வேலின் வெற்றி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை f : குடையுடைய மன்மதனை அனுப்பினோம். அவன் மேனியை எரித்து நீறாக்கினி முன்போல் ஞானமோனத்தில் அமர்ந்தீர்! தும் அடியாராகிய நாங்கள் இங்ங்ணம் தளர்தல் தகுமோ? இனியேனும் சிறிது இரங்கியருளிரோ?" என்று அவர்கள் ஓலமிட்டார்கள். - அப்பொழுது சிவபெருமான் கருணைகூர்ந்து, "வான வர்களே! வருந்தாதீர்கள்; உமக்காக இமய மலையில் உள்ள மங்கையை மணந்து உமது - துன்பத்தை ஒழிக்கின்றோம். இனி நீங்கள் செல்லலாம்" என்று சொல்லி அனுப்பினார். சிவன் அபயம் அளித்தல் அவர்கள் விடைபெற்றுப் போனபின்னர், ரதி தேவி, தருணம் பார்த்துப் பெருமான் முன்னே ரதி అణp89 வணங்கித் துதித்து, "ஆண்டவனே! இறைவனே! இது முறையோ முறையோ! பிரமன் முதலிய தேவர்கள் செய்த சூழ்ச்சியால் என் கணவன் இங்கே வந்து அழிவுற்றான். அவன் செய்த குற்றத்தைப் பொறுத்து அருள் புரிதல் வேண்டும்" என்று விண்ணப்பம் செய்தாள். இங்ங்ணம் வேண்டிய ரதியை நோக்கி, ஈசன் அருள் கூர்ந்து, "மாதே! நீ வருந்தாதே பார்வதி தேவியை நாம் சென்று திருமணம் செய்யும்பொழுது உன் கணவனைத் தருவோம்; செல்க!" என்று விடை கொடுத்தனுப்பினார்; அப்பால், எதிரே இருந்த சனகாதி முனிவரை நோக்கி, "நற்றவ மைந்தர்களே! ஞான போதம், சொற்களில் அடங்குவதன்று; துயரம் நீங்கி, இவ்வண்ணம் மெளன நிலையில் இருந்து ஒன்ம்ச் சிந்தித்தில்ே ஆகும்" என்று உள்ளங்கொள்ள் உணர்த்தினார். அப்போது அருந்தவ முனிவர் நால்வரும் சிவபெருமான் சேவடிகளைச் சிந்தையாரத் தொழுது, "மயக்கம் த்ெளிந்திேன்ம்; கமைத்தேறினோம் என்று போற்றிச் சென்றார்கள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/19&oldid=919790" இலிருந்து மீள்விக்கப்பட்டது