பக்கம்:வேலின் வெற்றி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$0 வேலின் வெற்றி பூங்கானம் போந்து, மலர் கொய்து, மன மகிழ்ந்து, இனிய மஞ்சத்தில் இளந்தென்றல் வீசக் கண்ணுறங்கும் நம் வாழ்வெல்லாம் பொய்யாகிக் கனவு கண்ட கதை யாயிற்றே! பெருமையுணராது மருமகன்தான்ே என்று அவமதித்த தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்த வள்ளல்ாகிய ஈசுன்மீது வானவர் உன்னைப் போர் செய்ய ஏவினரே அவராலே பொடி புட்டாயே! என் உயிர்க்குயிரே ஆறாத பெருந்துயரால் அடியேனும் எரிகின்றேன்; உன்னை நோக்கி, வருகின்றேன்; வருகின்றேன் என்று புலம்பி வருந்தினாள். இதைக் கண்ட பிரமன் முதலாய தேவர்கள், "நீல அயன் முதலாய ರ್ಸ್ತಕ-Tu ஈசனிடம் ఉIG మిణః ஆனுப்பி வானவர் ຊຶມຫູ ົ້ ົ້ ່ໍ அவனையும அவா சுட்டெரித்தர் ... மெய்யாகிய மெளன நிலையைத் தவிர்ந் தாரில்லை; முன்போலவே அமர்ந்துள்ளார். அந்தோ இனி என் செய்வோம்?" என்று அயர்ந்தார்கள். பின்பு, திருக்கயிலாய நகரின் கோபுர வாயிலில் எல்லோரும் கூடித் துதிக்கலுற்றார். "எம்பெருமானே! அடியவர்களாகிய எங்களுக்கு அபயம் அளித்து ஆலகாலம் என்னும் நஞ்சை அள்ளி உண்டீர்! விண்ணுக் கடங்காமல் வந்த கங்கையைச் சடைமுடியிலே தாங்கினி எரித்து நீறாக்கவல்ல நெருப்பினை நெற்றிக் கண்ணிலே வைத்தீர் கொடிய பகைவரைக் கொன்று ஒழித்தீர்! இவ்வாறு காத்தருளிய நீர் இன்று கைவிட்டால் யாரைத் தஞ்சம் அடைவோம்? மைந்தர்க்குத் தந்தையரைத் தவிர வேறு தஞ்சம் உண்டோ? மாசற்ற மெய்யடியார்கள் குற்றம் செய்யினும் குணமெனக் கொண்டு ஆளும் பெருமானே! நும் சேவடியே சரணம் என்றடைந்தோம். நாள்தோறும் சூரன் கொடுமையால் நலிவுற்று நாங்கள் இறப்பதோ? எமது துயரத்தைச் சிறிதேனும் திருவுளத்திற் கொள்ளிரோ? கங்காதரனே! நீர் உமாதேவியை மணந்து எங்களைக் காத்தருளும்வண்ணம் மதியினர்கள்ாகிய நாங்கள் மதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/18&oldid=919785" இலிருந்து மீள்விக்கப்பட்டது