பக்கம்:வேலின் வெற்றி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி.சேதுப்பிள்ளை 9. கண் அடைத்ததா? பிரமதேவன் மனம் மகிழ்ந்ததா? சிரித்து முப்புரங்களையும் எரித்த சிவன்மீது போர் செய்யப் போதல் முறையோ என்று முன்னமே சொன்னேனே! அதைச் செவியில் ஏற்றாய் அல்லையே! வானவர் பணியை மேற்கொண்டாயே! நின் فانه-ابع பொடியாகிப் போயிற்றே! இக் கொடுமையைப் பார்த்தும் பிழைப்பார் உண்டோ? என்னுயிராகிய நீ இறந்த பின்னர், யான் தனியே இருத்தல் தகுமோ? நான் என்ன பாவம் செய்தேனோ? என் போன்ற பெண்களுக்கு என்ன துன்பம் செய்தேனோ? ஊழ்வினைப் பயனை யான் அறிவேனோ? அந்தோ விதியே! இவ்வாறு வந்து முடிந்ததே கரும்பு வில்லுடைய காவலனே! யாரும் துணையற்ற என்னைக் காத்திட வாராயோ? நெற்றிக் கண்ணுடைய பெருமானை நோவதற்கு நீதியுண்டோ? ஐயோ! பெர்ன் மாலை அணிந்த முடி எங்கே? அழகு ஒழுகும் திருமுகத்தின் பொலிவு எங்கே? அணி திகழும் தோள் எங்கே? அகன்ற மார்பெங்கே? ஐங்கணை எங்கே? நின் வில்லெங்கே? விளையாட்டெங்கே? என் செய்வேன்? என் கணவா! என்னை விட்டு எங்கே சென்றாய்? அந் நாளில் வானவரும், அயனும் மாலும் காண, அங்கித் தேவன் சாட்சியாக என்னை மணந்தாய்! இனி எந்நாளும் உன்னைப் பிரியேன் என்று வாக்களித்தாய். வசந்த மன்னனே! என் மனத்திற்கு இசைந்த மன்னனே!. என்ைத் தனியே விட்டுச் செல்லுதல் முறையோ! முறையோ 'சிவனிடம் போ என்று அனுப்பிய தேவர் எல்லாம் பொடியாகிய உன்னை வா' என்று விரைந்து எழுப்பு மாட்டாரோ? நின் தந்தையாகிய திருமால், பெரும் பேர் படைத்தவராயிற்றே! ஐயோ என்று நான் இங்குப் புலம்பி அழவும் அவர் வரக் காணேனே! உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட்ாரோ? அந்தோ! நெருப்பினால் நீறாவாய் என்று நின் தலையில் விதித்திருந்தால், அவரையெல்லாம் வெறுக்கலாமோ? பனிநீரைச் சிவிறியால் வீசி விளையாடி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/17&oldid=919763" இலிருந்து மீள்விக்கப்பட்டது