பக்கம்:வேலின் வெற்றி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 . வேலின் வெற்றி அங்கு எண்குணனாகிய ஈசனார் இருந்த வண்ணத்தைக் .* கண்டான், மன்மதன். "ஐயோ! இவரைக் கண்டபோதே உள்ளம் கலங்குகின்றது. , ஆவி அகத்ததோ புறத்ததோ அறியேன். என் மெல்லிய கணைகள் இப்பெருமானை வெல்லுமோ? அமரரும் பிரமனும் இவர் நிலையினை அறியார் பேர்லும் ஊழிக் காலத்தில் உலகமெல்லாம் சங்க்ாரம் செய்யும் சிவபெருமான்மீது பூங்கனை தொடுத்து நான் போர் செய்வேனாம்! இது சிரிக்கத்தக்க செயல் அன்றோ? ஆயினும், விதியின் செய்கை இது. யாவரே விதியைக் கடக்கவல்லார்? படைக்கின்ற பிரமதேவனும் அதன் வலிமையைத் தடுக்கவல்லனோ? என்று எண்ணினான்: செங்கையில் மழுவேந்திய சிவபெருமான்மீது குறி வைப்பான்போல் நின்றான், கொடுந்தொழில் புரியும் மன்மதன், "அழியத் துணிந்தவர்க்கு அச்சம் உண்டோ? நினைத்தது முடிப்பேன்" என்று கூறி, ஐந்து மலரம்புகளை ஐயன்மீது எய்தான். - மன்மதன் விட்ட மலர்க்கணை ஈசன் மேனியிற் பட்டது. அப்போது சிறிது கண் விழித்துப் பார்த்தார், ஈசன். அவர் நெற்றிக் கண்ணினின்று எழுந்த நெருப்பு காம வேளைச் சுட்டது. கயிலை மலை எங்கும். நெடும் புகை குழ்ந்து நிறைந்தது. கண் அழலால் எரிந்த காமன், அங்கமெல்லாம் நீறாகி மண்ணில் விழுந்தான்; இறந்தொழிந்தான். ஈசனார், முன்போல் அமைதியுற்றார். காமன் எரிந்து விழக் கண்ட ரதிதேவி கலங்கிப் - புலம்பலுற்றாள்; "திருமகள் மகனே! ஏழையேன் தி . இன்னுயிரே திருமால் மைந்தா சம்பரனைப் புலமடல பகைத்து வென்ற சதுரா கரும்பு வில்லேந்திய பெருந்தோள் வீரா. செம்பவளக் குன்றனைய சிவன் விழியால் வெந்து உடலம் அழிவுற்றாயே! இன்று விண்ணவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/16&oldid=919741" இலிருந்து மீள்விக்கப்பட்டது