பக்கம்:வேலின் வெற்றி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 15 இங்ங்ணம் இமயமலையிற் பூங்கொடி போன்ற உமையவள் தவத்தினைக் கண்டு திருவருள் புரிந்த மனம் பேசுதல் ஈசன், கயிலையங்கிரியை அடைந்து, சப்த ரிஷிகள் எனப்படும் எழுவகை முனி வரையும் மனத்திலே நினைத்தார். அம் முனிவர்கள் விரைந்து கயிலை மலையை அடைந்து, "எம் தந்தையாகிய ஆண்டவனே. தும் கருணையால் எம்மை நினைக்க, இங்கு வரப்பெற்றோம். ஆதலால், அடியேங்கள் பிழைத்தோம்; கொடிய தீவினையும் தீர்ந்தோம்; இனி, எமக்கு ஒரு தீங்கும் உண்டோ?" என்று தொழுது நின்றார்கள். ஈசன் அவரை நோக்கி, "இமயமலை யரசனிடம் நீங்கள் சென்று, இன்றே உமையவளை எமக்குத் தாரை வார்த்துத் தரும்படி கேட்டு, விரைவில் இங்கு வரல் வேண்டும்” என்றார். அப் பணி தலைமேற்கொண்ட சப்த முனிவரும் மலையரசன் , மாளிகைக்குச் சென்றார்கள். அவர்களைக் கண்ட அரசன் மனமகிழ்ந்து, "ஐயரே! உம்முடைய திருவடிகள் தோயப்பெற்ற இமயமலை, மாமேரு மலையினும் புனிதமாய் முதன்மை யுற்றது. பல நாள் நான் செய்த பாவமும் இன்றே நீங்கிற்று. நீங்கள் அடியேன்பால் வந்த காரியம் யாது? சொல்ல வேண்டும்" என்றான். அது கேட்ட அருந்தவ முனிவர், "உலக மாதாவாகிய உமாதேவியைத் திருமணம் புரியக் கருதி, மன்னுயிர்க்கெல்லாம் உயிராக விளங்கும் சிவபெருமான், எம்மை உன்னிடம் அனுப்பினார். இதுவே யாங்கள் வந்த காரியம்" என்று உரைத்தார்கள். மன்னனும் மனமிசைந்து, "எல்லா உயிர்களையும், உலகங்களையும் ஈன்ற പഞഥധrങ്ങണ ஈசனார்க்கு மணம் செய்து கொடுத்து, என்னையும் அடிமையாகத் தருவேன்” என்றான். அப்பொழுது அருகே நின்ற அவன் மனையாள், சிறிது வாடிய முகத்தோடு, "ஐயன்மீர்! பிரமதேவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/23&oldid=919799" இலிருந்து மீள்விக்கப்பட்டது