பக்கம்:வேலின் வெற்றி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j6 - வேலின் வெற்றி புதல்வனாகிய தக்கன், தன் ஒப்பற்ற திருமகளை ஈசனுக்கு மணம் செய்து கொடுத்தான் என்றும், அங்ங்னம், கொடுத்த தக்கன் தலையை, அப் பெருமான் தகர்த்தெறிந்தார். என்றும் சொல்கின்றார்களே அந் நிகழ்ச்சியை நினைத்தால் என் நெஞ்சம் அஞ்சுகின்றதே எமது குலமகளை அவர்க்குக் கொடுப்பது எப்படி?” என்று கூறினாள். இவ்வாறு அஞ்சி வினவிய மலையரசியின் மனத்தைத் தெளிவிக்கக் கருதிய முனிவர்கள். "மாதே, நீ சிறிதும் வருந்தவேண்டா. தன்னிக சில்லாத் தலைவன் செய்கையை நீ நன்றாக உணரவில்லை. தக்கன் தவறு செய்தான். அவன் ஆக்கிய வேள்வியில் ஆதி முதல்வனாகிய ஈசனுக்கு அவிர்ப்பாகம் கொடுக்க மறுத்தான். அப் பெருமானை இகழ்ந்தும் பேசினான். அதனால், ஈசன் அவன் தலையை அறுத்திட்டார் என்று கூறிய பொழுது, அரசியும் கவலை தீர்ந்து திருமணம் செய்து கொடுக்க இசைந்தாள். . . ... ' மலையரசன் திருமணத்திற்கு இசைந்த செய்தியை முனிவர்கள் ஈசனிடம் போந்து விண்ணப்பம் செய்தார்கள். பெருமான், எழுவர்க்கும் திருவருள் புரிந்து விடை கொடுத்தார். ஈசனரது சேவடி தொழுது அன்னார் தம் இருப்பிடம் சேர்ந்தார்கள். மலையரசன் உடனே தேவ தச்சனை அழைத்து, "என்னை யாளுடைய சிவபெருமானுக்கு, யான் பெற்ற உலக மாதாவாகிய உமையவளைத் திருமணம் செய்து கொடுக்கப் போகின்றேன். ஆதலால், இம் மாநகர் முழுவதும் பொன்னுலகம் போன்று அழகுற இலங்கும் வண்ணம் அலங்கரிப்பாயாக" எனப் பணித்தான்; பின்னர் திருமால் பிரமன் முதலிய தேவர்களும், மாதவ முனிவர்களும், அவர்தம் பன்னியரும் அன்புடன் உமையவள் திருமணத்திற்கு எழுந்தருளும் வண்ணம் எங்கும் தூதரை அனுப்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/24&oldid=919801" இலிருந்து மீள்விக்கப்பட்டது