பக்கம்:வேலின் வெற்றி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

są *** டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை § { செந்தாமரையில் வாழும் திருமகள் முதலிய மாதர்கள், நெடுங்கால்ம் நோன்பியற்றி அங்கமெல்லாம் நொந்த உமையம்மையைத் தொழுது, மங்கலமாகிய மணக்கோலம் செய்தார்கள்; இறைவனை வழிபடும் அன்பர் போல ஆர்வத்தோடு உமையம்மையின் தவக் கோலத்தைக் களைந்தார்கள் அழகெலாம் ஒருங்கே வாய்ந்த மங்கையின் மேனியைக் குறையற்ற முறையில் கோலம் செய்தார்கள். இவ் வண்ணம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் மலை ஈசன் யரசன், நெருங்கிய சுற்றத்தோடும், நிறைந்த திருமணத்திற்கு அன்போடும் திருக்கயிலாய மலையை எழுந்தருளல் அடைந்தான் நந்தி தேவரது ஆணை பெற்று, உயிருக்குயிராகிய சிவபெருமான் சேவடியை வணங்கி நின்று, "எம்பெருமான்ே ஆதியில் அகில உலகமும் ஈன்றருளிய அன்னையைக் காதலோடு மணம்புரியத் திருவுளம் கொண்டீர் சோதிட நூலோர் குறித்த நன் முழுத்தம் பங்குனி உத்தரமாகும். அந் நாளே இந் நாள் ஆதலால், இமயமலைக்கு எழுந்தருளல் வேண்டும்" என்று விண்ணப்பம் செய்தான். ஈசன் அதற்கு இசைந்தருளினார். மலையரசன் விடைபெற்றுச் சென்றான். உடனே ஈசன், நந்தி தேவரைக் கருணையோடு அழைத்தார்; "நம் திருமணத்தைக் காண்பதற்குச் சிறந்த உருத்திர கணங்கள், திருமால் முதலாயினோர், இந்திரா தியர்கள் எல்லோரையும் வரவழைப்பாயாக" எனப் பணித்தார். ஆணைப்படியே எல்லோரையும் நந்திதேவர் வரவழைத்து, உருத்திரர்கள், சிவகணங்கள், தேவர்கள் - இவர்களைத் தனித் தனியாக வகுத்துத் தம் கை விரல்ாற் சுட்டி, ஈசனிடம் காட்டிப் பிரம்பேந்தி நின்றார். அப் பொழுது பிரமதேவன், பலவகை நகைகளைப் பொற்பீடத்தின்மீது வைத்து எடுத்துக்கொண்டு வந்து, ஈசன் முன்னே வைத்து, வணங்கி, "ஐயனே! உமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/25&oldid=919803" இலிருந்து மீள்விக்கப்பட்டது