பக்கம்:வேலின் வெற்றி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is - வேலின் வெற்றி விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. அடியேம் உய்யும் வண்ணம் மணம் புரியத் திருவுளம் கொண்டீர். ஆதலால், திருமேனியில் அணிந்துள்ள அரவப் பணியெல்லாம் களைந்து, இச் செவ்விய அணிகளை அணிந்துகொள்ள வேண்டும்: என்றான். அப்பொழுது பெருமான் புன்னகை கொண்டு, "அன்புடன் நீ தந்த இந் நகைகளை நாம் அணிந்துகொண்டாற் போலவே மகிழ்வுற்றோம்!" என்று தம் திருக்கரத்தால் அவற்றைத் தொட்டு அருளினார். பின்பு, தம் திருமேனியில் அமைந்த அரவங்களே ஆபரணமாக விளங்கும்படி ஈசன் தம் திருவுள்ளத்திலே கருதினார். அவை அவ் வண்ணமே ஆயின. உலகெலாம் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளாகிய ஈசனுக்கு இச் செயல் அரிதாகுமோ? அதனைக் கண்டு யாவரும் கை கூப்பித் தொழுது நின்றார். முன்னொருகால் திருமாலும் அயனும் தேடிக் காணாத தேவதேவன், உமாதேவியாரிடம் செல்லத் திருவுளம் பற்றினார்: அக் கருத்தை அங்கேயிருந்த தலைவர்க்குக் குறிப்பினால் உணர்த்தினார்; இமயமாமலைக்கு எழுந்தருளினார். ஈசனார் மணக்கோலங்கொண்டு இமய மாமலையிலே எழுந்தருளியபோது, மங்கையர், அப்பெருமானது அற்புதத் திருவுருவைக் கண்டு வணங்கிக் கங்கு கரையற்ற காதல் வெள்ளத்திலே மூழ்கினர்; "எம்பெருமான் அணிந்துள்ள நகைகளும், தரித்துள்ள பொன்னாடையும், பூசியுள்ள கலவைச் சந்தனமும், புனைந்துள்ள புதுமலர் மாலைகளும் அவருடைய இயற்கையான பேரழகை மறைத்தனவே." என்று மனந் தளர்ந்தர், சிலர். முறுக்கமைந்த நெடுஞ்சடை முடியுடைய செம்மேனி எம்மானை நோக்கி நின்று மனம் உருகினார், சிலர்: காதலுற்று வெதும்பிக் கருகினார், சிலர்: தோழியரோடு பெருகும் காதலைப் பேசினார், சிலர். "பல பல பேசுதலால் வரும் பயன் என்னை? பெற்றம் ஊர்ந்த பெரு மானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/26&oldid=919805" இலிருந்து மீள்விக்கப்பட்டது