பக்கம்:வேலின் வெற்றி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - வேலின் வெற்றி ஆதலால், நீ கருதிய எல்லாம் தவறாமல் முடிப்பாய். வேறுள்ள முனிவராலும் தேவராலும் இக் காரியம் ஆகுமோ? யாவரினும் சிறந்த பேறு பெற்ற உன்னாலேயே முடியும். ஆதலால், இப்பொழுதே புறப்படு” என்று அருளிச்செய்தார். அவ் வரை கேட்ட முனிவர், "எம்பெருமானே! இப் பணியை எனக்கு அருள்கூர்ந்து அளித்தீர்! ஆயினும் இங்கு நிகழவிருக்கும் தெய்வத் திருமணக் காட்சியைக் கண்டு வணங்காமல் போவதற்கு இயலவில்லையே! நெஞ்சம் வருந்துகின்றதே என்று விண்ணப்பம் செய்தார். - அம் மொழி கேட்ட கயிலைநாதன், "முனிவா மன்ம் வருந்தாதே பொதிய மலைக்குச் செல். அங்கே வந்து நாம் திருமணக்காட்சி தருவோம். மனமகிழ்ந்து காண்பாயாக. எம்மை நினைத்து அம் மலையிற் சில காலம் இருந்து, பின்னர் முன்போலவே எம்மிடம் வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். தமிழ் முனிவன் மனமகிழ்ந்து, சிவபெருமான் சேவடியைப் பன்முறை வணங்கிக் கை கூப்பித் தொழுது, பெருமூச் செறிந்து, பிரியா விடை பெற்றுத் தென்திசை நோக்கிச் சென்றான். பொதியம் என்னும் பேர் பெற்ற மலையில் முனிவன் போய் அமர்ந்தபோது வடதலையும் தென்தலையும் துலாக்கோல் போல் சமனாகி நின்றன. உயிர்கள் எல்லாம் துயரம் ஒழிந்து, ஈசனைத் துதித்து மகிழ்ச்சியுற்றிருந்தன. திருமணத்திற்குக் குறித்த வேளையில், மலையரசன் விரும்பியவாறு, கொற்றவை காவல் செய்ய, இந்திரை . அடைப்பை ஏந்த, கங்கை முதலிய நங்கையர் திருமணக் . ளிகள் பிடிக் ، نهر ميج يم ஆ கவா வச. காளகள குடை படிகக, கலைமகள் பாட்டிசைக்க, திருமகள் கையைப் பற்றிக் கொண்டு உமாதேவி எழுந்தருளித் திருமணச் சாலையை அடைந்தாள்; ஆதியும் அந்தமும் இல்லாத அரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/28&oldid=919808" இலிருந்து மீள்விக்கப்பட்டது