பக்கம்:வேலின் வெற்றி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 2? பெருந்தலைவன் அடிகளில் விழுந்து வணங்கினாள். அரியாசனத்தில் தன் பக்கத்தில் அமரு மாறு உமையைப் பணித்தார், ஈசன். இந்திரை முதலிய யாவரும் துதிக்க, உமையவள் இறைவன் மருங்கே அமர்ந்தாள். மலையரசன் ஈசனுக்குரிய பூசனை செய்து, புவனம் ஈன்ற உமையவள் கையைப் பாசம் அகன்ற பரமன் கையில் வைத்து, "என் புதல்வியாகிய உமையை உமக்கு அன்புடன் தந்தேன் என்று மறைமொழி ஓதி, ஈசனை மருமான் எனக் கருதி வாச நன்னீரால் தாரை வார்த்தான். அப் பொழுது அரம்பையர் நடனம் செய்தனர்; சித்தரும் கந்தருவரும் கானம் பாடினர், தும்புருவும் நாரதரும் வீணையில் ஏழிசைக் கீதம் இசைத்தனர்; தேவரும் முனிவரும் திருமறை ஓதினர். - - திருமணச் சடங்குகள் முடிந்த பின்னர், தந்தையும் தாயுமாகி உலகமெல்லாம் ஈன்றருளிய ஈசனையும் உமையாளையும் முதலில் பிரமதேவன் வணங்கினான்; பின்னர் மாயவனும், இந்திரனும், முனிவரும், தேவரும் முறையாக வழிபட்டார்கள். அந் நிலையில், மன்மதனை இழந்து கைம்மை நிலையடைந்து துன்புற்ற ரதியாள் ஈசனுடைய பொன்னடிகளில் விழுந்து வணங்கி, "தீவினையேன் துன்பத்தைத் தீர்த்தருளல் வேண்டும்" என்றாள். அப்போது, உயிர்க்குயிராக நின்று வினைப்பயனை உணர்ந்து ஊட்டும் கருணை வள்ளலாகிய பெருமான், "மாதே வருந்தாதே" என்றுரைத்து, மன்மதன் வந்து தோன்றும்படி மனத்திலே நினைத்தார். உடனே, முன்னைய வடிவத்தொடு தோன்றிய மன்மதன், உமாதேவியாரோடு வீற்றிருந்த சிவபெருமானது பொன்னார் திருவடியை வணங்கித் துதித்து, "ஐயனே, அடியேன் செய்த பெரும் பிழையைப் பொறுத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/29&oldid=919810" இலிருந்து மீள்விக்கப்பட்டது