பக்கம்:வேலின் வெற்றி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வேலின் வெற்றி வ்ேண்டும்" என்றான். அது கேட்ட பெருமான், "மைந்தா! உன்னிடம் சீற்றம் உற்றாலன்றோ இப்பொழுது சீற்றம் தணிவது; மனம் கலங்காதே. நமது கண் அழலால் எரிந்த நின் உடலம் பொடியாகி அப்பொழுதே போயிற்று. ஆயினும், ரதிதேவி வேண்டுகின்றாளாதலின் அவளுக்கு மட்டும் உருவத் துடன் நீ விளங்குவாயாக! ஏனை வானவர் முதலிய யாவர்க்கும் அநங்கனாய் இருந்து உன் அரசியலை நடத்துக!” எனப் பணித்தார். பின்பு, மன்னுயிர்க்கு உயிராகிய ஈசன், இடப வாகனத்தில் எழுந்தருளி, உமாதேவியாரைப் பக்கத்திற்கொண்டு முன்போலவே வானவரும் பூத கணங்களும் புடைசூழப் பொன்மயமான இமயத்தை விட்டுக் கயிலாய மலையை அடைந்தார். - - இவ்வாறு இருக்கையில், "உலகத்தையெல்லாம் அசுரரிடம் , தேவர்கள் ஒப்புவித்து, நமக்குத் துன்பத்தை விளைத்து, துயரம் யோகிபோல் இருந்தார், ஈசன்; நாம் சென்று வேண்டிக்கொண்ட பொழுது இரக்க முற்றுப் பார்வதிதேவியை மணந்தார்; ஆயினும், ஒரு மைந்தனைத் தந்து நம்மைக் காத்தருளாமல் சும்மா இருப்பது ஏனோ? கயிலாய ഥങ്ങിൽ நாமனைவரும் இப்பொழுதே சென்று, நெடுங்காலமாக நாம் அடைந்து வரும் துன்பங்களை முறையிடுதலே நன்று" என்று தேவர் பலரும் எண்ணினர். அப்படியே அவர்கள் கயிலையங்கிரியை அடைந்து, உமை யொருபாகத் திறைவன் முன்னே போந்து, செம்மை வாய்ந்த திருவடிகளைத் தலையால் வணங்கி எழுந்து, மெய்யன்போடு துதித்தனர்; "உலகங்களையெல்லாம் படைத்தருளிய ஆண்டவனே! அருமையான வேதங்களும் நின் செய்கையை அறியும் தன்மை யுடையனவோ? உருவம், தொழில், பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/30&oldid=919814" இலிருந்து மீள்விக்கப்பட்டது