பக்கம்:வேலின் வெற்றி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 23 ஒன்றும் இன்றியே எங்கும் நிறைந்துள்ள நீ, அம் மூன்றையும் தாங்கி நிற்பது மன்னுயிர்க்கெல்லாம் முத்தி யளித்திடும் கருணையினால் அன்றோ? பழமைக் கெல்லாம் பழமையான பொருள் நீயே என்றால், புதுமைக்கும் புதுமையான பொருளாக உள்ளாய் பழமையும் புதுமையும் நீயே என்றால் மற்றவைகள் அல்லையோ? உன்னை யாதென்று துதிப்போம்? எங்களை முன்னமே படைத்தாய்; ஆட்சி செய்யும்படி எங்களுக்கு அருள் செய்தாய்; எங்களுள் ஒருவனாகவும் உள்ளாய். உன் செயல் எங்களால் அறிய ஒண்ணாது” என்று போற்றினர். அப்போது, நீலகண்டனாகிய ஈசன் அவர் முகம் நோக்கி, "நீர் வருந்தி மனம் தளர்ந்தீர் உமக்கு என்ன வரம் வேண்டும் என்றாலும் இப்பொழுதே தருவோம்! வேண்டுவதைச் சொல்லுங்கள்" என்றார். அது கேட்ட வானவர் அகமகிழ்ந்து, "ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத ஐயனே! அருவமும் உருவமும் இல்லாத ஆண்டவனே! தனக்குவமையில்லாத் தலைவனே! காரணங்களெல்லாம் கடந்து நின்ற கர்த்தனே! போக்கும் வரவும் இல்லாத புண்ணியனே! இன்பமும் துன்பமும் இல்லானே! வேதமும் கடந்து நின்ற விமலனே! உமக்கு நிகரான ஒரு குமரனைத் தந்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தனர். இங்ங்ணம் பிரம்மன் முதலிய வானவர் செய்த அறுமுகவேள் விண்ணப்பத்தைச் செவியில் ஏற்ற செம்மேனி உற்பத்தி எம்மான், "நீர் விரும்பியவாறே ஒரு புதல்வனைத் தருவோம்" என்று திருவாய் மலர்ந்து, ஐந்து முகத்தோடு அதோ முகம் கொண்டு, மெய்யறிஞர் தியானிக்கும் ஆறுமுகங்களோடு தோன்றினார். வானவர் அனைவரும் நெஞ்சம் திடுக்கிட்டு வியப்புற்று, திருவருள் முறைமையை எண்ணித் துதித்து நிற்கையில், அம்முகங்களில் அமைந்த நெற்றிக்கண் ஒவ் வொன்றிலும் ஒவ்வொரு நெருப்புப் பொறியைத் தோற்றுவித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/31&oldid=919816" இலிருந்து மீள்விக்கப்பட்டது