பக்கம்:வேலின் வெற்றி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வேலின் வெற்றி ஈசன். அப் பொறிகள், உயிர்களுக்கு அருள் புரிந்திடத் தோன்றின ஆதலால், ஒருயிரையும் அழிக்கவில்லை; ஆயினும், எல்லாரையும் எல்லாவற்றையும் நடுங்கச்செய்தன. அவற்றின் வெம்மையால் உமையம்மை வியர்த்து, மனக் கலக்க முற்று எழுந்து, பொன்னடிச் சிலம்புகள் புலம்ப, தன் இருக்கையை நோக்கி ஓடினாள். தீப்பொறிகள் எங்கும் பரந்து செறிந்தபோது செம்பொற் கோவிலில் அங்குமிங்கும் சிதறிய வானவர்கள் பெருமூச்செறிந்து மீண்டும் எம்பெருமான் பக்கத்தில், வருந்திய மனத்தினராய் வந்தடைந்தார்கள், "எம் ஐயனே! கொடிய அசுரரைக் கொன்று ஒழித்தற்கு ஒரு மைந்தனை நின்பால் வேண்டினோம்; அதற்கு அளவற்ற நெருப்பை நீ அளித்தாய். யாங்கள் இனி எவ்வாறு உய்வோம்? ஆண்டவனே! வெங்கனல் எங்கும் மேலிடுகின்றது: அதன் வெப்பத்திற்கு ஆற்றாது அஞ்சி ஒடிய நாங்கள் உன் திருவடியே சரணம் என்று அடைந்தோம். எம்மைத் தஞ்சம் அளித்துத் தாங்க வல்லார் வேறு யாருளார்?" என்று பணிந்தார்கள். அப்போது ஈசன், புதியவாகத் தோன்றிய ஐந்து திருமுகங் களையும் மறைத்து, முன்போல ஒரு முகத்தோடு விளங்கினார்; திருவருள் நெற்றியில் ஆறு முகங்களினின்றும் பிறந்த தீப்பொறிகள் - மண்ணிலும் விண்ணிலும் சென்றனவெல்லாம் - தம் முன்னே வரும்படி சிந்தித்தார். அப் பொழுதே எங்கும் நிறைந்த நெருப்பு, முன்போல் ஆறு பொறிகளில் அடங்கி, அவர் முன்னே சென்று அடைந்தது. அப் பொறிகளை ஈசன் அமர்ந்து நோக்கினர். அந் நிலையில் வாயு தேவனையும் அங்கித் தேவனையும் - நோக்கி, "நீங்கள் இருவரும் இச் சுடர்களை முறையாகச் சுமந்து சென்று கங்கையாற்றில் சேர்த்துவிடுங்கள். கங்கை, அவற்றைச் சரவணப் பொய்கையிற்கொண்டு சேர்ப்பாள். இதுவே தும் பணி" என்றார் ஈசன். அவ்வுரை கேட்ட தேவர் இருவரும் திடுக்கிட்டு, மும்முறை இறைவன் திருவடியில் விழுந்து எழுந்து, "ப்ெருமானே ஒரு பொய்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/32&oldid=919817" இலிருந்து மீள்விக்கப்பட்டது