பக்கம்:வேலின் வெற்றி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வேலின் வெற்றி பல மரங்களையும் ஆயுதங்களையும் மலைகளையும் கையில் ஏந்தி எதிரே சென்றன. திருமால் விடுத்த நேமிப்படையை ஆரமாகக் கழுத்தில் அணிந்த தாரகன் பூதப் பெரும் படையைக் கொன்று குவித்தான். அவனை எதிர்த்துப் போர் செய்வதற்கு ஏற்ற வலிமை தம்மிடம் இல்லை என்று அறிந்த பூத கணத் தலைவர்கள். மனம் உடைந்து சிதறியோடினர். அது கண்டு, உயர்ந்தோர் புகழும் திறம் வாய்ந்த வீரவாகு ம் தேவர் பெரிய மரம் போன்ற வில்லை - ே: 5:55 தரணிந்து எதிரே நின்ற ಹಣ6।। பேர் செய்தல் பாதது. அழியாத் திறமை கொண்டு அமா புரிந்த பூதரையும் வில்லாளரையும் வென்று விட்டோம் என்று எண்ணினாயோ? இதோ! நின் உயிரை உண்பேன்" என்று வீரமொழி பேசினார். அது கேட்ட தாரகன், "அரியை நரி வெல்லுமாயின் நீயும் என்னை வெல்வாய்! திருமாலைப் போர்க்களத்தில் வென்றேன். அவன் நேமிப் படையைக் கழுத்தில் அணிந்தேன். என் வலிமையைச் சிறிதும் எண்ணிப் பாராமல் கொல்வேன் என்று வீரம் பேசினை என்று இகழ்ந்துரைத்தான். அந் நிலையில் மாயைக்குரிய மந்திரத்தைத் தாரகன் மனத்திலே நினைத்தான்; அதன் பயனாக எண்ணிறந்த வடிவங்களைக் கொண்டான்; எங்கும் இருள் பரவினாற் போல எல்லையற்ற படைக்கலங்களை ஏவி, ஒருவனாக நின்று போர் புரிந்தான். அப்பொழுது, வீரவாகு தேவர் ஒரு வீரப் பெரும்படையை விடுத்து மாயையை விலக்கினார். தாரகன் புறங்காட்டி ஓடினான். வீரவாகு முருகப் பெருமானைச் சிந்தித்து அவனைப் பின் தொடர்ந்தார். மாயையின் இருப்பிடமாகிய கிரவுஞ்ச மலையின் ஒரு குகையிலே சென்று ஒளித்தான், தாரகாசுரன். கோபமுற்ற வீரவாகு தேவர், இது மாய மலை என்றெண்ணிக்கொண்டு திகைத்து நின்றபோது, அம் மலை, மயக்கம் தரும் உறக்கத்தை உண்டாக்கி, அவர் அறிவை மயக்கிற்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/48&oldid=919854" இலிருந்து மீள்விக்கப்பட்டது