பக்கம்:வேலின் வெற்றி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 39 வானவர் பெருமகிழ்வடைய, அருகே நின்ற மெய்யருள் வீரவாகுவைப் பெற்ற வீரவாகு കേഖങ്ങ് நோக்கி, “அதோ போர் செய்ய நிற்கும் மலையே கிரவுஞ்ச மலையாம். அதன் அனுப்புதல் பக்கத்தில் ೬576 கோட்டையுள், நிறைந்த - அசுரப்படைகளுடன் தாரகன் என்னும் அசுரன் அமர்ந்திருக்கின்றான். பூதப்படைகளோடு நீ போந்து அவன் கோட்டையை வளைத்திடு தடுத்துப் போர் புரியும் அசுர சேனையைப் படுத்திடு; பாவியாகிய தாரகன் வந்தால் போர் தொடுத்திடு; அவனைக் கொல்லுதல் அரிதாயின் நாம் வந்து முடித்திடுவோம். முன்னே செல்க' என முருகப் பெருமான் பணித்தார். வீரவாகு தேவரும் வீரரும் முருகவேளை மும்முறை வலம் வந்து தொழுது விடை பெற்று, ஆயிரம் வெள்ளமாகக் கூடி மகிழ்ந்து சென்றார்கள். இவ் வண்ணம் படைவீரரோடும் யூதர்களோடும் எழுந்து சென்ற வீரவாகு தேவர், யானை முகத்தைக் கொண்ட தாரகாசுரன் கொடுங்கோல் ஆட்சி புரிந்த மாய மாநகரை அடைந்தார். உடனே, பூதப்படைகள் நகரத்தின் உள்ளே புகுந்து, எதிர்த்த தன் அசரோடு நின்று போர் புரிந்தன. அதை யறிந்த எதிர்த்தல் துதர்கள் அரண்மனைக்கு ஓடிச் சென்று, தாரகனை வணங்கி, "ஐயனே! உம் தமையன் சிறை வைத்துள்ள வானவரை விடுவிக்கச் சிவபெருமான் மைந்தனாகிய கந்தன் என்பவன் வந்துள்ளான். அவன் அசுரரை வெல்வான் என்று ஆகாய வழியே சென்ற தேவர்கள் சொல்லக் கேட்டோம். அன்னார் சொல்லிய வண்ணமே கந்தன் வந்துள்ளான். அவன் படை நமது நகரத்தை அழித்தது" என்றார்கள். அப்பொழுது ஊழித்தீயில் நெய்க்கடல் விழுந்தால் எழும் தீக்கொழுந்து போல உயர்ந்த அரியாசனத்தினின்றும் மலை போன்ற மகுடம் அண்ட கோளத்தை முட்டும்படி எழுந்தான், தாரகன். வெற்றி முரசம் முதலிய வாத்தியங்கள் முழங்கின. மன்னர் மன்னனாகிய தாரகன், சேனையோடு வரக் கண்ட பூதப் பெரும்படைகள், சீற்றம் கொண்டு ஆரவாரித்து, கடலில் சென்று பாயும் ஆறுகள் போலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/47&oldid=919850" இலிருந்து மீள்விக்கப்பட்டது