பக்கம்:வேலின் வெற்றி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வேலின் வெற்றி கூறினாள். இவற்றைக் கண்ட திருமாலும், பிரமனும், இந்திரனும், "ஆண்டவனே! எம்மைப் பாதுகாத்தருளினி எங்கள் மனத்தில் இனி ஒரு குறையும் இல்லை; இன்றே பிழைத்தோம், பிழைத்தோம்" என்று அம்மையப்பருடைய திருவடிகளைத் தொழுதார்கள். அப்போது எம்பெருமான், "நீங்களும் நன்மை புரியும் கந்தனோடு செல்வீர்களாக" என விடை கொடுத்தருளினார். முருகவேள் பெரியதொரு தேரின்மீது எழுந்தருளினார். அவர் i-jöö. அருளைப் பெற்ற வீரர்கள் அருகே வந்து சேர்ந்தார்கள். தி ண்டு முனிவரும் தேவரும் முறையாகச் சூழ்ந்து நின் o ( றார்கள். திருநீறும் கண்டிகையும் அணிந்தவர்கள்; முதல் சிவபெருமானையன்றி மற்றெவரையும் தெய்வமாக மனத்திலும் கருதாதவர்கள் மாற்றார் உயிரைப் பலியாக உண்டவர்கள் கூற்றுவனது வீரப்படையையும் வெற்றி கொள்ளும் திறலுடையவர்கள்; இத்தகைய பூதப்படை வீரர்கள் தத்தம் தலைவரோடு திரண்டெழுந்து சண்முகப் பெருமானை அடைந்து, கையெடுத்துத் தொழுது துதித்துப் பெருங்கடல் உடைந்தாற் போன்று ஆரவாரித்தார்கள். அப்போது முருகவேள் நெடுங்கடலின் நடுவே இலங்கும் சூரியன் போலப் பரந்த சேனை சூழ்ந்துவரக் கயிலாய மலையை விட்டு நிலவுலகத்தில் வந்தருளினார். வழியில், கிரவுஞ்சம் என்னும் மலை நிமிர்ந்து ஓங்கி நின்றது. அதைக் கண்டு வானவர், மனம் பதைத்தார். இந்திரன் கலக்கங் o கொண்டு நின்றான். அப்போது நாரதர் முருகப் கிரவுஞ்ச பெருமானது மலரடி தொழுது, "ஐயனே இதுதான் மலையின் - தன்மையை கிரவுஞ்சம் என்னும் மலை. இதன் பக்கத்திலுள்ள மாய மாநகரில் சூரன் தம்பியாகிய தாரகன் முருகவேள் வாழ்கின்றால் » با ". &

  • ழ்கின்றான். இக் கொடியவன் திருமாலின்

றிதல் #2 - tببع திரு நேமிப்படையைப் பொன்னாரமெனப் பூண்டவன். இவனைக் கொன்றுவிட்டால், மூத்தவனாகிய சூரனை வென்றிடல் எளிதாகும்" என்று மொழிந்தார். அது கேட்ட குமரவேள், "இவனை இங்கேயே அழிப்போம்" என்றார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/46&oldid=919848" இலிருந்து மீள்விக்கப்பட்டது