பக்கம்:வேலின் வெற்றி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 37 யான் தவம் முயன்றபொழுது, நீர் எழுந்தருளி, நம்மிடம் ஒரு குமரன் தோன்றுவான்; அவனைக்கொண்டு அசுரரை அழித்து உமது துயரத்தை ஒழிக்கின்றோம் என்று அருளிச்செய்தீர்! அவ் வாறே திருக்குமாரனும் தோன்றியுள்ளார். ஆயினும் இன்றளவும் எம் துன்பம் தீர்ந்ததில்லை. மும்மை யுலகும் வணங்கும் எம்மானே! எம்மைப் பற்றி நிற்கும் கொடிய தீவினையின் பயன் இன்னும் தீர்ந்ததில்லையே! சூரனது வலிமையை அழிக்கத் தக்கவர் வேறு யாருமிலர். கங்காதரனே! இங்கே முறை யிடுவதல்லால், வேறு யாரிடம் சொல்லுவோம்? துன்பத்தை ஒழிக்கவும், செல்வத்தை அளிக்கவும், தந்தையரேயன்றி மைந்தர்க்கு வேறு யாருள்ளார்? ஆதலின், இனி அடியேங்களைக் காத்தருளல் வேண்டும் என்று இந்திரன் வணங்கி நின்றான். , . இம்மை மறுமைப் பயன்களை அளித்தருளும் இறைவன் அச் அசுரரை அழிக்க சொற்களைக் கேட்டுக் ಹ@ಣ6 கூர்ந்து "இனி. மன வருந்தாதீர்!" என்று அருளிச்செய்து அருகே அனுப்புதல் யிருந்த முருகன் திருமுகத்தை நோக்கி, - "உலகத்தை நிலை குலைத்துப் பல உயிர்க்கும் துயர் இழைத்து, வானவர் நகரத்தை அழித்து, தீமையே புரிந்து திறம்பட வாழும் சூரனையும் அசுரர் குலத்தையும். நீ சென்று கொன்று, சுவர்க்கலோகத்தின் ஆட்சியை மீண்டும். இந்திரனுக்குக் கொடுத்து இங்கு வந்து சேர்வாயாக" என்று திருவாய் மலர்ந்தார். பின்னர், பஞ்ச பூதங்களையும் அழிக்க வல்லதும், உயிர்கள் அனைத்தையும் ஒருங்கே நாசம் செய்ய வல்லதும், மாற்றாரது வலிமையையும் வரங்களையும் சிதைத்து உயிருண்ண வல்லதும், கொல்லும் படைக்கலங்களுக் கெல்லாம் தலைமையுற்று விளங்குவதும் ஆகிய ஒப்பற்ற வேலாயுதத்தை ஈசன் குமாரவேள் கையில் கொடுத்தார். அந் நிலையில் உமையம்மை, அருமைத் திருக்குமாரனை அருகில் வைத்து, அருளோடு அனைத்து, உச்சி மோந்து, அப்பா நூறாயிரத்து ஒன்பது வீரர்களும் உன்னை நெருங்கிவர, பெருந்திறல் பெற்ற அசுரர் குலத்த்ை வேரறுத்து வானவர் குறையைத் தீர்த்து இங்கே வருக என்று ஆசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/45&oldid=919846" இலிருந்து மீள்விக்கப்பட்டது